அதிகரிக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்: சிகிச்சை எப்படி? ரூல்ஸ் வெளியிட்டது மருத்துவத்துறை
சென்னை: தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் நடப்பு மாத துவக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட 45 சுகாதாரமாவட்டங்களில், 25-க்கும் மேற்பட்ட சுகாதார மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 4,074 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், கேரள எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் நிபா வைரஸ் சிகிச்சைகளுக்கு தனித்தனி வார்டுகள் ஏற்படுத்தி, சிகிச்சை அளிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில் இன்புளுயன்சா எனப்படும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் ப்ளூவாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.பாதிக்கப்பட்டவர்களின் இருமல் மற்றும் தும்மலில் இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. முக்கியமாக குளிர் காலத்தில் தான் இந்த நோய் தாக்கும்.
இந்த நிலையில், ப்ளூ எனப்படும் இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்படுவோருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையின் வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
* தீவிர காய்ச்சல், அதிக இருமல், தீவிர காய்ச்சலுடன் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65-வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்பவர்கள். பிரிவு பி வகையில் வருகின்றனர்.
* ஏ மற்றும் பி பிரிவினர் யாருக்கும் இன்புளூயன்சாவிற்கான பரிசோதனையோ மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை. இவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலே போதுமானது.
* பிரிவு சி வகையில், தீவிர காய்ச்சல், தொண்டை வலி, ஆகியவற்றோடு மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, ரத்த அழுத்தம் குறைவு ஆகியவை இருந்தால் இன்புளுயன்சாவை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
* சி பிரிவினரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்போர் 24 மணி நேரமும் 104,108 எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் நிவர்த்தி செய்யலாம்.
* மருத்துவமனைகளில் பணிபுரிவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவு. மருத்துவ பணியாளர்களுக்கான ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தல்.
*கர்ப்பிணிகள், இணைநோய் உள்ளவர்களுக்கும் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications