காலையில் எழுந்தவுடன் "டீயை" மட்டும் தொடாதீங்க.. உடனே நிறுத்துங்கள்.. மோசமான பாதிப்புகள் ஏற்படுமாம்!
சென்னை: இங்கே நமது நாட்டில் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இருப்பினும், அது உடலுக்கு நல்லதா கெட்டதா என நமக்குத் தெரியாது. இது குறித்து ஆய்வாளர்கள் சொல்வது என்ன என பார்க்கலாம்.
இங்கே பலருக்கும் டீ இருந்தால் தான் அவர்களுக்கு அன்றைய நாளே தொடங்கும்.. டீ குடிக்கும் வரை அவர்களுக்கு எந்த வேலையும் நடக்காது. எப்போது டீ குடிக்கிறார்களோ அதன் பின்னரே சுறுசுறுப்பாக ஆவார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் காலை, மாலை, இரவு, பகல் என எல்லா நேரமும் டீயுடன் தான் இருப்பார்கள். சாப்பாடு சாப்பிடுகிறார்களோ இல்லையோ அவர்களுக்கு டீ நிச்சயம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அதிலும் நமது நாட்டில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு டீ குடிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. புத்துணர்ச்சியைத் தரும் இந்த பானம் தான் பலருக்கும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். பலரும் காலை எழுந்தவுடன் பல்லைக் கூட தேய்க்காமல் முதலில் குடிப்பது டீயாகவே இருக்கும்.
மார்னிங் டீ, பெட் டீ எல்லாம் இப்போது இணையத்தில் டிரெண்டாகும் ஒன்று. டீ கோப்பையுடன் இந்த நேரங்களில் இணையத்தில் போட்டோக்களும் அள்ளும். ஆனால் இவை ஆரோக்கியமான ஒன்றா என்ற கேள்விக்கு துரதிஷ்டவசமாக இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பது ஆரேக்கயத்திற்கு நல்லது இல்லையாம்.
டீ போன்ற காஃபின் கலந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிப்பது உடலில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், காஃபின் வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும். இது எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பது என்பது பெரும்பாலான இந்திய குடும்பங்களில் வழக்கமான நடைமுறையாகும். தேநீர் ஒரு டெஸ்ட் ஆன பானமாக இருந்தாலும், அதில் காஃபின் இருக்கவே செய்கிறது. இது நமது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும், காலையில் தேநீர் குடிப்பது உடலின் இயற்கையான கார்டிசோல் உற்பத்தியைப் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இது குறித்து உணவியல் நிபுணர் விதி சாவ்லா கூறுகையில், "கார்டிசோல் ஒரு ஹார்மோன் ஆகும், இது தூக்கம்-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது. மேலும், நாள் முழுவதும் நமக்கான ஆற்றலை வழங்குகிறது. நீங்கள் காலையில் காஃபின் உட்கொள்ளும் போது, அது கார்டிசோலை உற்பத்தியில் தலையிடலாம்.. இது நாளின் பிற்பகுதியில் சோர்வு மற்றும் மந்தமான உணர்வுகளுக்கு வழிவகுக்கும்" என்றார்.
காலையில் எழுந்த உடன் தேநீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய பல பாதிப்புகள் குறித்து பார்க்கலாம்.
வயிற்றில் எரிச்சல்: வெறும் வயிற்றில் டீ குடிப்பதால், வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டு, அசௌகரியம், வீக்கம் மற்றும் குமட்டல் ஏற்படும்.
நீரிழப்பு: தேநீர் ஒரு டையூரிடிக் (diuretic) ஆகும், அதாவது இது சிறுநீரை அதிகரிக்கும்.. நீரிழப்பை ஏற்படுத்தும்.. காலையில் ஏற்கனவே பல மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்போம் என்பதால் இந்த நேரத்தில் நீரிழப்பு ஏற்படுவது மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஊட்டச்சத்தைச் சீர்குலைக்கிறது: டீயில் டானின்கள் உள்ளன.. இது இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுகளுடன் எளிதாகப் பிணையும்.. இதனால் அவை உடலால் உறிஞ்சப்படுவதும் குறைவாகவே இருக்கும்.
பல் சிதைவு: தேநீரில் இயற்கையான அமிலங்கள் உள்ளன.. அவை பல் பற்சிப்பியை அரிக்கும், குறிப்பாக நீண்ட காலத்திற்கு அதிக அளவு உட்கொள்ளும் போது பல் சிதைமானத்திற்கு காரணமாக இருக்கும்.
இதன் காரணமாகவே காலை நேரத்தில் டீ குடிக்கக் கூடாது. தேநீர் அருந்த உகந்த நேரம் என்பது காலை உணவுக்குப் பிறகு மதிய உணவுக்கு முன்பும் ஆகும்.. அப்போது குடித்தால் தான் வளர்சிதை மாற்றச் செயல்முறைகள் சீராகச் செயல்பட உதவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications