Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரும்பு ஜூஸின் ஆரோக்கியம்.. கல்லீரல், கிட்னி பாதுகாப்பு.. சர்க்கரை நோயாளி கரும்புச் சாறு குடிக்கலாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிப்பு சுவை கொண்ட கரும்பு, உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது ஆச்சரிய தகவலாக உள்ளது.. நீரிழிவு நோயாளிகளுக்கு கரும்பு சாறு நல்லது என்பது அதைவிட ஆச்சரிய தகவலாக கிட்னியின் செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் பேருதவி புரியும் கரும்பு பற்றின பிற நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதிலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

கரும்பு சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தாராளமாக நிறைந்துள்ளன.. இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் உட்பட பிற எலக்ட்ரோலைட்டுகள் இந்த சாறில் கலந்துள்ளன.. அதனால்தான், நோய் எதிர்ப்பு சக்தியை சாறு நமக்கு தருகிறது. உடலிலுள்ள நோய்களை எதிர்த்தும் போராடுகிறது..

Karumbu chaaru Sugarcane Juice

கரும்பு சாற்றின் சத்துக்கள்

கரும்பு சாற்றில், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்திருக்கின்றன.. எனவே, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி தருவதில் கரும்பு சாறு முதன்மையானதாக உள்ளது..

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் எந்த நோயும் எளிதில் நெருங்குவதில்லை.. உடம்பில் நோயை எதிர்த்து போராடக்கூடிய திறன் கரும்புக்கு உள்ளது.. கிட்னி, கல்லீரல், தோல், என ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் கரும்பு சாறு உதவி புரிகிறது.. எப்படி தெரியுமா?

வைட்டமின் C நிறைந்துள்ளதால், தொண்டைப்புண், வயிற்றுப்புண்ணை கரும்பு ஜூஸ் குணமாக்குகிறது.. அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும், கரும்பு சாறு குடிக்கும்போது தீர்வு கிடைக்கும்..

வைட்டமின் C. ஆண்டி ஆக்சிடெண்ட் நிறைந்துள்ளதால், சருமத்துக்கு கவசம் போல பாதுகாப்பை கரும்பு சாறு தருகிறது.. அடிக்கடி கரும்பு ஜூஸ் குடித்து வருபவர்களுக்கு முகப்பரு, தோலில் சுருக்கங்கள் எளிதில் ஏற்படுவதில்லை. இந்த சாற்றினை தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.. இதனால் பொடுகு தொல்லை இருந்தாலும் விலகிவிடும்.

கிட்னி கற்கள்

கிட்னியில் உள்ள கற்களை கரைத்து வெளியேற்றக்கூடியது கரும்பு சாறு.. அத்துடன், சிறுநீர் பாதையில் எந்தவிதமான தொற்றுக்களையும் நெருங்க விடுவதில்லை.. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், கறும்பு சாறு குடிக்க சொல்வார்கள்.. கல்லீரலை காக்கும் சக்தி கரும்பு சாறுக்கு உள்ளதே இதற்கு காரணம்.

செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கரும்பு சாறு குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.. இதனால் மலச்சிக்கல் தீருவதுடன், வயிற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களும் தடுக்கப்படுகின்றன. உடலில் தேங்கியுள்ள கழிவுகள், நச்சுகள் விலகுதால், உடல் எடையும் குறைகிறது.

வளரும் குழந்தைகளுக்கு நல்லது

வளரும் குழந்தைகளுக்கு கரும்பு ஜூஸ் தாராளமாக தரலாம்.. இதனால் மூளையின் செயல்பாடு அதிகரித்து, சுறுசுறுப்புடன் இயங்க துணை புரிகிறது. அதேபோல, பற்களுக்கு பலம் கிடைக்கும்.. இதனால் பற்களிலுள்ள சேதாரம் தடுக்கப்படுவதுடன், ஈறுகளும் உறுதிப்பெறும்,

மாதவிலக்கு நேரத்தில் வயிற்று வலி, அதிக ரத்தப்போக்கு இருந்தால், பெண்கள் இந்த கரும்பு சாற்றினை மாதவிடாய் ஏற்படுதற்கு 7 நாட்ளுக்கு முன்பு குடித்து வரலாம்.

நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா

கரும்பு சாற்று, குறைவான கிளைசெமிக் பண்பினை பெற்றுள்ளது.. இயற்கை சர்க்கரை உள்ளதால், சர்க்கரையும் உடலில் மெதுவாக உறிஞ்சப்படுகிறது. அத்துடன் உயர் கிளைசெமிக் பானங்களுடன் தொடர்புள்ளதால், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கரும்புச்சாற்றினை குறைவான அளவில் எடுத்துகொள்ளும்போது, சர்க்கரை கன்ட்ரோலில் வைத்திருக்க முடிகிறது.

ஆனால், கரும்பு சாறு நிறைய குடிக்கக் கூடாது.. இதனால், பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் வெளியாகிவிடும். இதன்காரணமாக, கணையம் தேவைக்கு அதிகமாக இன்சுலினை உற்பத்தி செய்துவிடும்.

எனவே, பிரஷ்ஷான கரும்பு சாற்றை, 7 நாட்களுக்கு ஒருமுறை அரை டம்ளர் மட்டுமே, அதுவும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சர்க்கரை நோயாளிகள் குடித்து வரலாம். மற்றபடி ஆரோக்கியமாக உள்ளவர்கள், தினமும் 2 முறை கரும்பு சாறு, எலுமிச்சம் சாறு கலந்து குடிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+