வெயில் காலத்தில் அவஸ்தைபடுத்தும் சிறுநீரக கற்கள்! ஆப்ரேஷன் செய்யாமல் கரைக்க என்ன வழி?
திருச்சி: வெயில் காலம் வந்துவிட்டாலே சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. காரணம் போதிய அளவு தண்ணீர் உட்கொள்ளாமை, பணி காரணமாக சிறுநீரை அடக்கிக் கொள்ளுதல் என பலவற்றை சொல்லலாம்.
இந்நிலையில் சிறுநீரக கற்களை எளிமையான முறையில் கரைப்பதற்கான் ஆலோசனையை தருகிறார் திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறியிருப்பதாவது;

கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதருக்கு சிறுநீரக கற்கள் பிரச்சினை இருந்ததா என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! இருந்தது! ஆனால் எந்தவித மருத்துவ வசதியும், வளர்ச்சியும் இல்லாத நேரத்தில், காலத்தில் மனிதர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் எல்லா நவீன மருத்துவ வசதி, விழிப்புணர்வு, படிப்பறிவு என அனைத்தும் இருந்தும் நோயின்றி யாரும் வாழ முடியவில்லை, மருந்தின்றி வாழ முடியவில்லை.
மனிதனுடைய ஆயுட்காலம் 120 ஆண்டுகள்! 300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் 100 ஆண்டுகள் வாழ்ந்தனர். ஆனால் இன்று 60-70 ஆண்டுகளுக்குள் இறந்து விடுகின்றனர். அறிவியல் ஆராய்ச்சி.... அறிவியல் ஆராய்ச்சி என்று கேட்கும் நாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பக்க விளைவு, நிறைந்த துரித உணவுகளையும், மருத்துவர் பரிந்துரையோடுதான் பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துகளைத்தான் தொடர்ந்து நாம் அனைவரும் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் பயன்படுத்தி பலன் அடைந்த சித்த மருத்துவ முறையை இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத மருந்துகள் என ஒதுக்குவதுடன் மனிதன் எங்கே...இதை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து விடுவானோ என பலரும் குறை சொல்லி கொண்டே நலத்தையும் கெடுத்து பணத்தையும் இழந்துவருகின்றோம்.
நவீன மருத்துவம் இல்லாத காலங்களில் அனைத்து நோய்களையும் தீர்த்து ஆரோக்கியம் காத்தனர் நம் முன்னோர்கள். இந்த வகையில் நம் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற பல்வேறு மூலிகைகள், மருந்துகள் உள்ளன. அப்படி இருக்கும் போது ஏன் பயப்படவேண்டும் பொதுமக்கள்!?

சிறுநீரக கற்களுக்கு:-
- சிறுபீளை
- நெருஞ்சில்
- மூக்கிரட்டை
- பூனை மீசை
- வாழைத்தண்டு
- வாழைப்பூ
- கல்லுருக்கிச் செடி
- நீர்முள்ளி
- வெள்ளி
- ரணகல்லி
சிறுநீரக கற்கள் கரைய மருந்து:-
- மூக்கிரட்டை சூரணம்
- நெருஞ்சில் சூரணம்
- சிறுபீளை சூரணம்
- நண்டுக்கல் பற்பம்
- குங்கிலய பற்பம்
- வெடியுப்பு சுண்ணம் பற்பம்
- சிலாசத்து பற்பம்
- உருக்கு செந்தூரம்
- ரணகல்லி சூரணம்
- வாழைப் பூ சாறு
மூக்கிரட்டை கீரை, நெருஞ்சில் முள்,சிறுநீரை, பூனை மீசை, நீர் முள்ளி இவைகளை சம அளவு எடுத்து 240 மி.லி நீரில் போட்டு 60 மிலியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 60 மிலி தினசரி காலை மாலை உணவிற்கு முன்பு தொடர்ந்து கற்கள் கரையும் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ரணகள்ளி இலை ஒன்று அல்லது இரண்டு எடுத்து 5 மிளகு சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீர் மோருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் இரண்டு வாரங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று நண்டுக்கல் பஸ்பம், குங்கிலிய பஸ்பம்,வெடியுப்பு சுண்ணம்,சிலாசத்து பஸ்பம் ஆகியவற்றை அளவுப்படி எடுத்து (1/2 கிராம் முதல் 1 கிராம் வரை) மேற்கண்ட மருந்துகளுடன் சேர்த்து தொடர்ந்து எடுத்துக் கொள்ள சிறுநீரக கற்கள் உடைந்து கரைந்து வெளியேறும்.

* உணவில் வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பீர்க்கங்காய், சுரைக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*உப்பு, புளி காரம் குறைத்து உண்ண வேண்டும்.
*வெளியில் விற்கும் எந்த உணவுகளையும், திண்பண்டங்களையும் உண்ணக் கூடாது.
*துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
*சிறுநீரை அடக்கக் கூடாது.
*பசியை அடக்க கூடாது
*மலத்தை அடக்க கூடாது.
*தூக்கத்தை அடக்க கூடாது
*தினசரி குறைந்தது 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
*மது,புகை,பொடி பழக்கம் இருந்தால் முற்றிலும் தவிர்க்க வேண்டும்
*மேற்கண்டவைகளை முறையாக பின்பற்றி சித்த மருத்துவர் ஆலோசனையோடு சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் அறுவை மருத்துவம் இல்லாமல் சிறுநீரக கற்களை கரைக்க முடியும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications