"இந்த பழம்" 12 வகையான கேன்சர் வராமல் தடுக்கும்.. புற்றுநோய் செல்களை அழிக்கும்.. நேச்சுரல் கீமோதெரபி
சென்னை: சீத்தாப்பழம் (custard apple) தெரியும், அதென்ன முள் சீத்தாப்பழம்? ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. புற்றுநோய் வருவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவே மருந்து.. ஆம்! நாம் உண்ணும் உணவே பல நேரங்களில் மருந்தாக பயன்படுகிறது. காய்கறிகள், பழங்கள், மசாலா பொருட்கள் உள்ளிட்டவைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆற்றல் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்துள்ளது.

அந்த வகையில் சீதாப்பழம் குறித்து கேள்விப்பட்டிருப்போம். நம் வீடுகளிலும் இந்த மரங்களை வளர்த்து வருகிறோம். இந்த காய் கோடைக் காலங்களில் அதிகம் கிடைக்கும்.
இந்த சீதாப்பழத்தில் பல சத்துகள் உள்ளன. இது இதயத்தை பலப்படுத்தி சீராக இயங்கச் செய்கிறது. இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கின்றன. ஆரம்ப நிலையில் உள்ள காசநோயை குணப்படுத்தும் திறன் இந்த சீதாப்பழத்திற்கு உண்டு, கோடையில் ஏற்படும் தாகத்தை இது தணிக்கும். உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால் உடனே வாந்தி நின்றுவிடும். ஏதாவது அறுவை சிகிச்சை செய்திருந்தால் சீதாப்பழம் சாப்பிடும் போது உள்ளுறுப்புகளில் ஏற்பட்டுள்ள ரணங்கள் ஆறும். மலச்சிக்கலுக்கு நல்லது. ஊளைச் சதை உள்ளவர்கள் சீதாப்பழத்தை சாப்பிட்டால் அது கணிசமாக குறைந்துவிடும்.
ரத்த சோகையை குணப்படுத்தும். இந்த பழத்தில் குளுகோஸ் இருப்பதால் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை கொடுக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். அது போல் முள் சீதாப்பழம் என ஒன்று உள்ளது. இது கேன்சரையே தடுக்கும் வல்லமை கொண்டது. இந்த பழத்தின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
இந்த முள் சீதாப்பழம் பிரேசில் நாட்டை சேர்ந்தது. இந்த பழம் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வெளிப்புறத்தில் முட்கள் இருக்கும். தோலும் தடிமனாக இருக்கும். இந்த பழத்தை இயற்கையான கீமோதெரபி என்கிறார்கள். அதாவது புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைதான் இந்த கீமோதெரபி. இந்த முள் சீதாப்பழத்தையும் அதன் இலைகளையும் உண்பதால் 12 வகையான புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

மார்பக புற்றுநோய், நுரையீரல், கணையம் உள்ளிட்டவைகளில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது. எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். புற்றுநோய் செல்களை குறைக்கவும் இது உதவுகிறது. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை நீக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி உள்ளது. செரிமானத்திற்கு நல்லது. ஒற்றை தலைவலியை சரி செய்யும்.
மாதவிடாய் காலத்தில் இந்த முள் சீதாப்பழத்தை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும். எலும்புகளுக்கு நல்லது. இந்த பழத்தில் நியாசின் உள்ளது. இது கொழுப்பை குறைக்கும். ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, உடல் நடுக்கம், இருமல் உள்ளிட்ட பிரச்சினைக்கும் இது நல்லது. இத்தனை நன்மைகள் கொண்ட பழத்தை நாம் மாதத்தில் இரு முறையோ அல்லது மூன்று முறையோ பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் வாரத்திற்கு ஒரு முறை கூட பயன்படுத்தலாம். ஆனால் இந்த பழத்தை கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தவே கூடாது.












Click it and Unblock the Notifications