காசநோயால் பாதிப்பா? ஆவாரம் இலைச் சாறு எடுங்க போதும்! டி.பி. ஓடி போய்டுமே!
சென்னை: எலும்புருக்கி நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆவாரம் இலை வரப்பிரசாதமாக விளங்குகிறது. அது போல் நீரிழிவு நோயாளிகளும் இந்த ஆவாரம் பூவை பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஆவாரம் பூ என்பது மஞ்சள் நிறத்தில் பார்க்கவே கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த பூ டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பூக்கும். ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்பது பழமொழிாயாகும்.
இந்த ஆவாரம் பூவிற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதனால்தான் அந்த பழமொழி சொல்லப்பட்டு வருகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி பல நோய்கள் குணமடைந்ததாகவும் சொல்லப்படுகின்றன.
சர்க்கரை நோய் குறைய ஆவாரம் பூ சிறிதளவு, திப்பிலி 5, மிளகு 5, சுக்கு - சிறிதளவு, சிற்றரத்தை- ஒரு சிறிய துண்டு ஆகியவற்றை வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
காயவைத்ததை பொடியாக்கி சிறிதளவு எடுத்து அதை தண்ணீரில் சேர்த்து காலையும் மாலையும் இரு வேளை குடித்து வர வேண்டும். அப்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும் என்கிறார்கள். அது போல் கை, கால் வலி பிரச்சினை , உடல் அசதி, கண் பிரச்சினைகள் உள்ளிட்டவைகளுக்கும் ஆவாரம் பூ சிறந்து விளங்குகிறது.
ஆவாரம் பூவை தினமும் சாப்பிட்டு வந்தால் அனைத்து நோய்களும் குணமாகி வாழ்க்கையே ஆரோக்கியமானதாகிவிடும் என்கிறார்கள். ஆவாரம் செடியில் எல்லா பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை. ஆவாரம் பூ உடலில் ஏற்படும் நமைச்சலை போக்குகிறது.
எலும்புருக்கி நோயால் அவதிப்படுவோருக்கு ஆவாரம் இலைச் சாறு அருமருந்தாக உள்ளது. ஆவாரம் இலைகளை தேவையான அளவுக்கு எடுத்துக் கொண்டு அதை சாறாக்கி காலை, மாலை என குடித்து வந்தால் எலும்புருக்கி நோய் நீங்கும் என்கிறார்கள்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டால் அதுடன் பாசாம் பிசின் கலந்து குடித்து வந்தால் சரியாகும். இந்த ஆவாரம் பூ சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரகம் பிரச்சினையாகாதவகையில் இது பாதுகாக்கிறது.
ஆவாரம் பூ பொடியை பாசிப்பயறு மாவு, கடலை மாவுடன் கலந்து அத்துடன் பன்னீர் சேர்த்து குழைத்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால் சருமம் பொன் போல் ஜொலிக்கும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications