சர்க்கரை நோயாளிக்கு பயனுள்ள பூனை மீசை மூலிகை தண்ணீர்.. சிறுநீரகம் ஆரோக்கியம் பெற ஹெல்த் டிரிங்க்
சென்னை: பார்ப்பதற்கு பூனை மீசை மாதிரியே இருக்கும், பூனை மீசை பூக்களில் உள்ள மகிமையும், மகத்துவமும், மருத்துவமும் ஏராளம்.. அந்த காலத்தில் பாரம்பரிய மருத்துவத்தில் பூனை மீசை மூலிகை தவிர்க்க முடியாத இடத்தை பெற்றதற்கு என்ன காரணம் தெரியுமா? கிட்னியை ஆரோக்கியமாக வைத்திருக்க, இந்த மூலிகை எப்படி உதவுகிறது? சிறுநீரகம் பலம்பெற உதவும் இந்த மூலிகை, மாதவிடாய் தொந்தரவுகளையும் நீக்குகிறது.. அந்தவகையில் பெண்கள் இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
அதேபோல, பூனை மீசை இலைகளை சுத்தம் செய்து, அதனுடன் மிளகு, பூண்டு வைத்து விழுதாக அரைத்து, தினந்தோறும் நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிட்டு வரும்போது, சிறுநீரக செயலிழப்பு முதல் சிறுநீரகத்தில் உள்ள மொத்த பிரச்சனையும், தொந்தரவுகளும் தீர்ந்துவிடும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்
ஏனென்றால், இந்த செடியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை சிறுநீரகப் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, தொற்றை குணப்படுத்த உதவுவதுடன், ரத்த சர்க்கரையும் கட்டுக்குள் கொண்டுவர துணை புரிகின்றன.
ரத்த அழுத்தம் பிரச்சனையை சரி செய்யக்கூடியது இந்த பூனை மீசை மூலிகை.. இதன் சாற்றினை தினமும் 2 வேளை குடித்து வரும்போது நீரிழிவு நோய் நெருங்காது.. ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தாலும் தீர்ந்துவிடும்.. கசாயம் போல செய்ய முடியாவிட்டாலும், வெறுமனே ஒரு கைப்பிடி மூலிகையை அலசி, தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
ரத்தத்திலுள்ள யூரியா, க்ரியாடின் அளவையும் குறைப்பதுடன், ரத்தம் சுத்திகரிப்பும் இதன்மூலம் நடக்கிறது.. தேவையற்ற உப்புகள் வெளியேற்றப்பட்டு உடல் எடை குறைய துவங்குகிறது.. கிட்னியில் கல் இந்த மூலிகை சாறு அவைகளை வெளியேற்ற செய்துவிடும்.
தாதுக்கள், உப்புகள்
அதாவது, சிறுநீரகங்களில் உருவாகும் தாதுக்கள் மற்றும் உப்புகளின் கடினமான படிவங்களாகும்.. இந்த கடின படிவத்தைதான் பூனை மீசை செடி சிறுநீரக கற்களை உடைத்து கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றுவதால், டயாலிசிஸ் செய்வதை தவிர்க்கவும் இது உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிலக்கு தொந்தரவுகள் இருந்தாலும், பித்தப்பையில் கற்கள் இருந்தாலும், தீர்க்க முடியாத விஷ ஜூரம் இருந்தாலும், அனைத்துக்குமே இந்த பூனை மீசை மூலிகை சாறு பயன்தருகிறது.
அவ்வளவு ஏன், ஆரம்பக்கட்ட கிட்னி கேன்சரையும் இந்த மூலிகை குணமாக்கும் என்கிறார்கள்.. அதனால்தான் சித்த மருந்துகள், ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் மூலப்பொருளாக இந்த பூனை மீசை மூலிகையை பயன்படுத்துகிறார்கள்..
உலக நாடுகளில் மகிமை
பூனை மீசை செடியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அவை உடலை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. எனவேதான், ஜப்பான், மலேசியா, சீனா, இந்தோனேசியா நாடுகளில், இந்த மூலிகையில் தேநீர் தயாரித்து குடிப்பது வழக்கமாகவே உள்ளது.. ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள்.
இந்த மூலிகையின் இலைகளை பவுடர் செய்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பூனை மீசை சப்ளிமெண்ட்ஸும் கடைகளிலும் கிடைக்கின்றன.
எனவே, சர்க்கரை நோயாளிகள், கிட்னி தொந்தரவு, ரத்த கொதிப்பு பாதிப்பு உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், இவைகளை மருந்தாக அல்லது தேநீராக எடுத்து கொண்டால் பெரும்பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications