மழைக்காலத்தில் சாப்பாட்டிலும் கவனம் மக்களே.. தவிர்க்க வேண்டிய உணவுகள்.. எதுலாம் தெரியுமா.. லிஸ்ட்
சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில், தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வெயில் காலத்தை விட மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். எனவே, மழைக்காலங்களில் நாம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மழைக்காலம் வந்து விட்டாலே சூடாக டீயும் பஜ்ஜி, போண்டாவையும் சாப்பிட்டு விட்டு பிடித்தமான பாடல்களை கேட்ட படியும் இதமான தட்பவெப்ப நிலையை அனுபவிப்பது என்பது அலாதி இன்பத்தை கொடுக்கும். ஆனாலும் மழைக்காலங்களில் சாப்பிடும் உணவில் கொஞ்சம் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மழை நேரத்தில் நாம் கொஞ்சம் தள்ளி வைக்கவேண்டிய உணவு வகைளை பற்றி இங்கே பார்ப்போம்.

* மழைக்காலங்களில் கீரை, முட்டைகோஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், விவசாய நிலங்களில் பறித்து கொண்டு வரப்படும் இத்தகைய உணவு பொருட்கள் மொத்தமாக சந்தைகளில் குவித்து வைக்கப்படுவதுண்டு. மழைக்காலங்களில் காணப்படும் அதிகப்படியான ஈரத்தால் இவற்றில் பாக்டீரியா , பூஞ்சை தொற்றுக்கள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மழைக்காலங்களில் இவற்றை கொஞ்சம் தள்ளிவைக்கலாம். ஒருவேளை சாப்பிட வேண்டும் என்றாலும் ஒருமுறைக்கு பலமுறை கழுவிய பிறகே சமையல் அறைக்கு கொண்டு செல்லலாம்.
* சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பானிபூரியை சாப்பிடுவதை தவிர்க்கலாம். மழை நேரத்தில் சற்று காரமான உணவுகளை சாப்பிடும் ஆசை அனைவருக்கும் தோன்றுவது இயல்புதான். ஆனால், சாலையோரங்களில் விற்கப்படும் பானிபூரிகள் செய்யப்படும் இடம் மழைக்காலங்களில் அசுத்தமாக இருக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பாக்டீரியாக்கள் மற்றும் பிற நோய்கிருமிகளின் பிறப்பிடமாக இது இருக்கும். எனவே மழைக்காலங்களில் உணவு சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்க சாலையோர உணவு கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்
* நீண்ட நேரமாக வெட்டி வைத்து இருந்த பழங்கள் மற்றும் சாலட்கள் ஆகியவற்றை மழைக்காலங்களில் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் வெட்டிவைக்கப்பட்ட பழங்களில் மழை நேரத்தில் பாக்டீரியா தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இதனை நாம் உட்கொண்டால் உடல் நல பாதிப்புகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, மழைக்காலத்தில் பழங்களை வெட்டி வைத்துக் கொண்டு நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்த்து விட்டு தேவைப்படும் நேரத்தில் வெட்டி உடனே சாப்பிடுங்கள்.
* மழைக்காலங்களில் கடல் உணவுகள் எளிதில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. எனவே, சரிவர சமைக்கப்படாத மீன் இறைச்சிகளை மழை நேரத்தில் சாப்பிடுவது ஃபுட் பாய்சன் ஏற்பட வழிவகுக்கும்.
* மழைக்காலங்களில் இருக்கும் அதிக ஈரப்பதம் காரணமாக இயல்பாவே சாப்பிட்ட உணவு ஜீரணிக்க சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொண்டால் ஜீரணம் ஆவது மேலும் தாமதம் ஆகும். அதுபோக செரிமான பிரச்சினைகளுக்கு வழி ஏற்படுத்தலாம்.
* மழை நேரத்தில் காற்றில் காணப்படும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக உணவுகள் எளிதில் கெட்டுப்போகும். எனவே மழைக்காலத்தில் பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவற்றில் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருக்கலாம்.
* கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை மழைக்காலங்களில் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் குளிர்காலத்தில் இவற்றை சாப்பிடும் போது நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications