அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனின் போது 7 வார குழந்தைக்கு இதயதுடிப்பு இருக்காதது ஏன் தெரியுமா?
சென்னை: அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போது கருவில் இருக்கும் 7 வாரம் 6 நாட்களேயான குழந்தைக்கு இதயதுடிப்பு இல்லை என மருத்துவர்கள் சொல்வதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் திவ்யா அருள் என்பவர் கூறியிருப்பதாவது: அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போது கருவிலிருக்கும் 7 வாரம் 6 நாட்களான சிசுவிற்கு இதயத்துடிப்பு இல்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? இது மிகவும் சங்கடமான ஒரு நிலை ஆகும்.

பொதுவாக இது போன்று உருவாகிய கருவிற்கு எட்டு வாரங்கள் வரை இருதயத் துடிப்பு வராமல் போனாலும்
அல்லது ஏற்கெனவே தென்பட்ட கருவின் இருதயத் துடிப்பு அடுத்தடுத்த அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் போது தெரியாமல் மறைந்து போவதுமுண்டு.
NO FETAL POLE SEEN . ONLY EMPTY SAC SEEN..NO CARDIAC ACTIVITY SEEN என்று சொல்வார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது.. கருத்தரித்த பெண் சரியான ஓய்வு இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அதிக நேரம் ட்ராவல் செய்யும் போது கர்ப்ப வாய் உறுதியாக இல்லை என்றால் SPOTTING என்ற சிறிதளவு இரத்தக்கசிவு ஏற்படும்.
எட்டு வாரத்திற்கு உள்ளே இருக்கும் கருவின் உட்பகுதிகள் இரத்தக் கசிவாக வெளியேறிவிடும். கருத்தரித்த பெண்ணிற்கு தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் நீரிழிவு பிரச்சினை இருக்கும் போது அதற்கான மாத்திரைகளை சரிவர எடுக்காமல் இருக்கும் போது அந்த கரு சரியாக வளர்ச்சி அடையாது. இது போல இருதயத் துடிப்பு இல்லாமல் போய்விடும்.
கருத்தரித்த பெண்ணிற்கு போதிய அளவு ஃபோலிக் ஆசிட் சத்து இல்லாமல் இருப்பது.. அதிக இரத்த சோகை இருப்பதினாலும் உருவாகும் கருவின் ஆரோக்கியம் சரியாக இருப்பது இல்லை.. சொந்தத்தில் திருமணம் செய்தவர்கள் என்றால் கிட்டத்தட்ட தொடர்புடைய மரபணுவை கொண்ட விந்தும் முட்டையும் சேரும் போது அவை குறைபாடு கொண்ட கருவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியமான கரு உண்டானால் மட்டுமே ஆரம்ப கால கர்ப்பத்தில் காணப்படும் பீட்டா ஹெச்ஸிஜி ஹார்மோன் சீராக இருக்கும்.
ப்ரஜஸ்டீரான் ஹார்மோன் சரியாக சுரந்து இரத்தக்கசிவு இல்லாமல் கருவைக் காப்பாற்றும்.. தற்போது.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ப்ரஜஸ்டீரான் ஊசி மற்றும் ஃபோலிக் ஆசிட் மருந்துகள் மற்றும் பீட்டா ஹெச்ஸிஜி ஊசிகளும் கொடுத்து காத்திருக்கச் சொல்வார்கள் மருத்துவர்கள்.
இன்னொரு ஸ்கேன் சென்டரில் அல்ட்ரா சவுண்ட் செய்து கருவின் பாதிப்பை உறுதி செய்யவும் இன்னொரு மகப்பேறு மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்..
அப்படி ஒருவேளை அடுத்த வார அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் இதயத் துடிப்பு இல்லாத பட்சத்தில் தாயின் உடல் நலம் கருதி கருவின் பாகங்களை வெளியேற்றுவதே சிறந்தது.
அடுத்த முறை கர்ப்பம் தரிக்கும் முன்பு.. மகப்பேறு மருத்துவர் ஆலோசனை பெற்று மூன்று மாதங்கள் முன்பு இருந்தே போதிய ஃபாலிக் ஆசிட் சத்து மாத்திரைகள் மற்றும் புரதச்சத்து;இரும்புச்சத்து ;கால்சியம் நிறைந்த உணவுகளை தந்து பெண்ணின் ஆரோக்கியத்தை மீண்டெடுக்க வேண்டும்..
அதன் பிறகே அடுத்த கர்ப்பம் தரிப்பதற்கு அந்த பெண் மனதளவில் உடலளவில் தயாராக இருப்பார்கள். மன அழுத்தம் பெண்ணுக்கு அதிகமாக இருக்கும்.. போதிய கவுன்சலிங் கொடுக்க வேண்டும்.
அதுவும் முதல் கர்ப்பம் என்றால் எல்லாப் பெண்களுக்கும் கடும் மன உளைச்சல் ஏற்படும்.. ஆனால் இந்த குறைபாடு கொண்ட கருவை பெற்று எடுக்க இயலாது என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆறுதல் அளிக்கவும் என அந்த பதிவில் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications