நம் எதிர்ப்பு சக்தி நமக்கே எதிராக திரும்பும் கொடூரம்.. தாக்கப்படும் நரம்பு.. பெருவில் கதறும் மக்கள்
வாஷிங்டன்: பெரு நாட்டில் பரவக்கூடிய குய்லின்-பார் சிண்ட்ரோம்(Guillain-Barre syndrome) என்ற அரியவகை நோய் காரணமாக அங்கே 90 நாட்கள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கே இந்த நோய் பரவல் தற்போது எபிடமிக் என்ற நிலையை அடைந்து உள்ளது.
எப்பிடமிக் என்றால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் குறிப்பிட்ட மக்களுக்கு இடையே பரவும் நோய் ஆகும். இதை நோய் தொற்று என்பார்கள். இதுதான் தற்போது பெரு நாட்டில் பரவிக்கொண்டு இருக்கிறது. இதை சுருக்கமாக ஜிபிஎஸ் நோய் என அழைப்பார்கள். அங்கே இதுவரை 165 பேர் ஜிபிஎஸ் நோய் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரு நாடே இந்த நோய் காரணமாக கதறிக்கொண்டு இருக்கிறது. மிக மிக அரிதான இந்த நோய் அங்கே எப்படி பரவ தொடங்கியது, ஏன் பரவ தொடங்கியது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அது என்ன ஜிபிஎஸ் எனப்படும் குய்லின்-பார் சிண்ட்ரோம்(Guillain-Barre syndrome? என்று இந்த செய்தியில் பார்க்கலாம். ஜிபிஎஸ் நோய் ஏற்பட்டால் பொதுவாக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கே எதிராக செயல்படும். அதாவது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் வேலை உடலுக்குள் புகும் வெளிப்புற சக்திகளை, கிருமிகளை போரிட்டு கொல்வது.
இந்த எதிர்ப்பு சக்திக்கு திடீரென குழப்பம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த எதிர்ப்பு சக்தி திடீரென குழம்பிப்போய் நம்முடைய உடம்பையே தாக்கினால் என்ன ஆகும். அதுதான் இந்த ஜிபிஎஸ் நோய் ஏற்பட்டால் ஏற்படும். இந்த ஜிபிஎஸ் நோய் மூலம் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் நரம்புகளையே தாக்கும்.
இதை ஆட்டோஇம்யூன் நோய் என்பார்கள். சிலருக்கு தலையில் திடீரென கொத்து கொத்தாக முடி கொட்டி ஒரு சில இடத்தில் மட்டும் திட்டு திட்டாக மண்டை தெரியும். இதை அலோபேசியா என்பார்கள். அது போன்ற ஒரு வகை நோய்தான் இதுவும். ஆனால் இந்த ஜிபிஎஸ் கொஞ்சம் கொடூரமானது.. தலையில் உள்ள முடியை இது எடுக்காது. ஆனால் உயிரையே எடுக்கும்.
இந்த ஜிபிஎஸ் நோய் காரணமாக உடலின் எதிர்ப்பு சக்தி தவறுதலாக தண்டுவட நரம்புகள்,முதுகுத்தண்டு நரம்புகள் என்று முக்கிய நரம்புகளை தாக்கும். இதனால் உடல் உறுப்புகள் செயல் இழக்கும். பக்க வாதம் ஏற்படும். கடைசியில் மரணம் கூட ஏற்படும்.
தொடக்கத்தில் கை, கால் மரத்து போகுதல், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் பிற பகுதிகள் மரத்து போகுதல் இந்த நோயின் முக்கிய அறிகுறி ஆகும். பெரும்பாலும் ஆண்களிடம் இந்த நோய் அதிகம் ஏற்படும். மத்திய தர வயது ஆண்களிடம் அதிகம் ஏற்படும். இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இருந்தாலும் Campylobacter jejuni என்ற பாக்டீரியாதான் இந்த இன்பெக்ஷனை முதலில் பரப்பும். அது மட்டுமின்றி இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், சைட்டோமெலகோவைரஸ், எப்ஸ்டீன்-பார் வைரஸ் மற்றும் கோவிட்-19 வைரஸ் கூட இந்த ஜிபிஎஸ் திடீரென ஏற்பட காரணமாக இருக்கலாம். சமீபத்திய அறுவை சிகிச்சை அல்லது தடுப்பூசி கூட GBS ஐ தூண்டலாம். இது போன்ற நிகழ்வுகள் எது வேண்டுமானாலும் ஜிபிஎஸ்ஸை தூண்டி விடலாம்.
WHAT ARE THE SYMPTOMS OF GUILLAIN-BARRE SYNDROME?
நரம்பியல் கோளாறுகள் மற்றும் பக்கவாதம் பற்றி ஆய்வு செய்யும் அமெரிக்காவின் தேசிய மருத்துவ நிறுவனத்தின் படி, ஜிபிஎஸ் நோயின் பொதுவான அறிகுறி உடல் பலவீனம் ஆகும். படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது நடக்கும்போது பலவீனத்தை முதலில் கவனிக்கலாம். அதன்பின் இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். உடலில் எறும்பு ஊறுவது போன்ற உணர்வும் அடிக்கடி ஏற்படும்.
பிற அறிகுறிகள்:
- கண் தசைகள் பாதிப்பு மற்றும் பார்வையில் சிரமம்.
- விழுங்குவது, பேசுவது அல்லது மெல்லுவதில் சிரமம்.
- கைகள் மற்றும் கால்களில் குத்துதல் அல்லது மரத்து போதல்.
- உடல் வலி கடுமையாக இருக்கும், குறிப்பாக இரவில் வலிக்கும்.
- நடப்பதில் சிக்கல்கள் மற்றும் உறுதியற்ற தன்மை.
- அசாதாரண இதயத் துடிப்பு அல்லது இரத்த அழுத்தம்.
- செரிமானம் அல்லது சிறுநீர் செல்வதில் சிக்கல்கள்
சிகிச்சை: இதற்கு என்று தனியாக சிகிச்சை இல்லை. அறிகுறிகளை குணப்படுத்தும் சிகிச்சை மட்டுமே உள்ளது. வேகமாக சிகிச்சை மேற்கொண்டால் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. பிளாஸ்மா மாற்றம் கூட இதற்கு அளிக்கப்படுகிறது. இதற்கு என்று வேக்சின் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications