மீனில் திருக்கை நல்லதா? கர்ப்பிணிகள் சங்கரா மீன் சாப்பிடலாமா? ஆய்வுகள் தரும் பாதரச மீன்கள் இவைதான்
சென்னை: கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும்.. குறிப்பாக, புரோட்டீன், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பார்கள்.. தாவர வகை உணவுகளில் புரோட்டீன் இருக்கும் என்றாலும், மீன்களிலும் நிறைய புரதச்சத்து உள்ளது.. அந்தவகையில், கர்ப்ப காலத்தில் எந்தவகையான மீன்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம்? எவ்வளவு அளவு மீன்களை சாப்பிடலாம்? என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவைகளை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
கடல் உணவுகளில் மீன்கள் சற்று ஸ்பெஷலானது.. காரணம் இதில், ஒமேகா 3 என்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மீன்களை சாப்பிட சொல்லி டாக்டர்களே பரிந்துரைக்கின்றனர்.

டாக்டர்கள் சொல்வதென்ன?
இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, இந்த கொழுப்பு அமிலங்களானது, மனித மூளை, கண்களின் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது. இதனால் மனிதனின் சராசரி ஆயுள் கூடுகிறது. கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு தொந்தரவு வரை குணப்படுத்தக்கூடியது இந்த மீன்கள்..
நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், இதய ஆரோக்கியத்திற்கு மீன்கள் நன்மை பயக்கின்றன.. இதனால் இளம்வயது இதயநோய் அபாயமும் குறைக்க செய்கிறது. நரம்புத்தளர்ச்சி நோய் உள்ளவர்களுக்கும், மன அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களுக்கும் மீன்கள் சிறந்த உணவு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கர்ப்பிணிகளுக்கும் மீன்கள் நல்லதுதான்.. காரணம், கர்ப்பிணிகள் மீன்களை சாப்பிடும்போது, மூளை வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன..
கர்ப்ப கால ஊட்டச்சத்துக்கள்
சமீபத்தில் கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வரும் ரன்ஜனா பாகோன் ஒரு பேட்டியில் சொல்லும்போது, "கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அவசியம் ஆகும். மீனில் அனைத்து வகை ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் போன்றவை இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, இங்கிலாந்து நாட்டின் மெட்ரோ பாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு மையமும் இணைந்து ஆய்வு ஒன்றினை 11,875 கர்ப்பிணிகளிடம் மேற்கொண்டன.
மீன் உணவுகள் - கர்ப்பிணிகள்
அப்போது, மீன் உணவுகளை சாப்பிடும் கர்ப்பிணிகளின் பிறக்கும் குழந்தைகள், அதிக மூளை வளர்ச்சியுடனும், மூளை சம்பந்தமான நோய்கள் தாக்காமலும் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாம். அந்த குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போது, மூளை தொடர்பான நோய்கள் தாக்குவது குறைவாக இருப்பதுடன், குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு நடந்து முடிந்த நிலையில், அதே கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்த பிறகும் மீண்டும் ஆய்வு நடந்துள்ளது.. அப்போது கர்ப்ப காலத்தில் அதிக மீன் உணவுகளை சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகள், அதிக புத்திக்கூர்மையுடன் இருப்பதும் தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, இதற்கெல்லாம் மூலகாரணம் ஒமேகா 3 அமிலம் என்பதும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அரிதான அயோடின் சத்தும்தான் என்பதும் நிரூபணமாகியிருக்கிறது.
சங்கரா மீன் சாப்பிடலாமா
அந்தவகையில், ஆற்று மீன், சாலமன், நெத்திலி, மத்தி, சங்கரா மீன், வஞ்சரம், வவ்வால் மீன், கோலா மீன், காரப்பொடி மீன் போன்றவைகளில் ஒமேகா 3 நிறைய உள்ளதால், குறிப்பிட்ட அளவு மீன்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.. முரல், நகரை, கிழங்கான் போன்ற மீன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.. அதாவது, கர்ப்பிணி பெண்கள் வாரம் ஒன்றுக்கு 225 கிராம் முதல் 335 கிராம் அளவிலான மீன்களை சாப்பிடலாம்.
ஆனால், வாளமீன், சுறா மீன், சூரை, கெளுத்தி, மார்லின் மீன்வகைகளில் பாதரசம் இருக்கும் என்பதால், கர்ப்பிணிகள் தவிர்த்துவிடலாம். அதேபோல, பாதரசம் நிறைந்த சங்கரா மீனையும் கர்ப்பிணிகள் தவிர்க்கலாம் என்கிறார்கள்.. இது அலர்ஜியையும் தரலாம்.. குழந்தை பிறந்ததுமே, பாலூட்டும் பெண்களுக்கு திருக்கை மீன்களை தரலாம்.. இது தாய்ப்பாலை சுரக்கக்கூடியது..
எப்போதுமே கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவானது சிசுவையும் சென்றடையும் என்பதால், டாக்டர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது ஆரோக்கியமானது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications