அபாயகரமான நிலையில் புதுக்கோட்டை.. 229ஐ தொட்ட டெங்கு பாதிப்பு! ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்
புதுக்கோட்டை: டெங்கு காய்ச்சல் காரணமாக புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்து இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் டெங்கு பாதிப்பு அந்த மாவட்டம் முழுவதும் தீவிரமடைந்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ஒரே நாளில் 59 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200 ஐ தாண்டி இருக்கிறது. டெல்லி காய்ச்சலால் மட்டும் பாதிக்கப்பட்டு 229 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
500 க்கும் அதிகமான டெங்கு தடுப்பு பணியாளர்கள் புதுக்கோட்டையில் கண்காணிப்பு பணிகளிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகள், காலி இடங்களில் தேங்கும் நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பு அதிகரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வீடுகள் தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தி, பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
டெங்கு பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் பணியாளர்கள் கூடுதலாக டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காய்ச்சல் அறிகுறியுடன் வரும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து உரிய பரிசோதனை செய்து அதன்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கும் சுகாதாரத் துறையினர், தனியார் மருந்து கடைகளில் காய்ச்சல் மருந்து வாங்கி உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
புதுக்கோட்டை போல் மதுரையில் மேலும் 13 பேருக்கு டெங்கு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிப்பு 100 ஐ தாண்டி இருக்கிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழலில், காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றும், சாலைகள், காலி இடங்களில் தண்ணீரை தேங்கவிடாமல் தவிர்க்க அரசு நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications