சண்டிக்கீரை.. சண்டித்தனம் பண்ணும் நோயை அடித்து விரட்டும் சத்துக்களின் ஊற்று.. பலே லட்சக்கொட்டை கீரை
சென்னை: ஆண்களுக்கு அருமருந்தாகும் ஒருசில கீரைகளில் மிக முக்கியமானது சண்டிக்கீரை.. சிறுநீரக கற்களை வெளியேற்றுவது முதல் மூட்டுவலியை குணப்படுத்துவது வரை ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் சண்டிக்கீரையை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
சண்டிக்கீரைக்கு லச்லக்கெட்டை, லச்சக்கொட்டை, லச்ச கெட்ட கீரை, நஞ்சு கொண்டான் கீரை, நஞ்சுண்டான் கீரை, லஜ்ஜை கீரை, இப்படி பல பெயர்கள் உண்டு. ஆண்களுக்கு வலிமை தரக்கூடியது இந்த கீரைகள். அதனால்தான், இதனை இயற்கை வயாக்ரா என்று சொல்வார்கள்.

சண்டிக்கீரையை சுத்தம் செய்யும்போது, இதன் நடுவில் உள்ள நரம்பை, கத்தியால் கீறி நரம்பை எடுத்துவிட்டுதான் துண்டு துண்டாக நறுக்கி சமைக்க வேண்டும். சாதாரண கீரைகளை போலவே இதையும் சமைக்கலாம். அசைவ பிரியர்கள் ஆட்டு ரத்தத்தோடு சண்டிக்கீரையை சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுவார்கள்.. சைவ பிரியர்கள் பாசிப்பருப்போடு கீரையை சேர்த்து சமைத்து சாப்பிடுவார்கள்.
லஜ்ஜை என்றால் வெட்கம் என்று அர்த்தம். அதாவது, வெட்கத்தை விரட்டிவிட்டு, வேட்கை தீர்க்க தூண்டும் சக்தி இந்த கீரைகளுக்கு இருக்கிறதாம். அதனால்தான் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது.
சண்டிக்கீரைகள்: அகலமான இலைகளை கொண்ட சண்டிக்கீரைகளை, அழகுக்காக வீடுகளில் வளர்ப்பார்கள். ஆனால், இந்த கீரையிலுள்ள மருத்துவ சத்துக்கள் அபாரமானவை. வைட்டமின் A, C நிறைந்திருக்கும் இந்த சண்டிக்கீரைகள், ரத்தத்திலுள்ள உப்பின் அளவை சமன்படுத்தக்கூடியது.
வாத நோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்த கீரை, அருமருந்தென்றே சொல்லாம். உணவில் தொடர்ந்து சமைத்து சாப்பிடும்போது, முடங்கி கிடந்தவர்களும் எழுந்து அசால்ட்டாக நடப்பார்களாம். மூட்டு வலி, முழங்கால்வலி என்றாலும், இந்த கீரையை உணவில் 20 நாட்கள் விடாமல் சாப்பிடும்போது பலன் கிடைக்கும். ஒருவேளை மூட்டுகளில் வீக்கம் இருந்தால், இந்த கீரையில் நல்லெண்ணெய் தடவி, இளஞ்சூட்டில் வீக்கம் மீது வைத்து கட்டினால், நிவாரணம் கிடைக்கும்.
நச்சுக்கள், அழுக்குகள்: இந்த கீரைகள், உடம்பிலுள்ள விஷத்தையே முறிக்கும் சக்தி கொண்டது. அதனால்தான் இதற்கு "நஞ்சுண்டான் கீரை" என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்து கொண்டால், உடலிலுள்ள உள்ள நச்சுக்கள், அழுக்குகள் அத்தனையும் அத்தனையையும் சண்டித்தனம் செய்து வெளியேற்றிவிடும்.. சண்டித்தைலம் என்றே மூட்டுவலிக்கு, கடைகளில் தைலம் விற்கப்படுகிறது.
சிறுநீரகக் கற்கள் உட்பட சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி சண்டிக்கீரைகளுக்கு உண்டு.. சிறுநீர் வெளியேறாவிட்டால், இந்த சண்டிக்கீரையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, வெந்தய தூள் லேசாக கலந்து குடிக்கும்போது, அசுத்த நீர் வெளியேறிவிடும். இதன்மூலம் உடல் எடையும் மெல்ல குறைய துவங்கும்.
அதிக பித்தம் : டீ, காபி அதிகம் சாப்பிட்டு, உடம்பில் பித்தம் அதிகமாகிவிட்டால் அல்லது உடற்சூடு அதிகமாகிவிட்டால், இந்த கீரையை சமைத்து சாப்பிடலாம். இதனால் நுரையீரலில் தொற்று இருந்தாலும், சளி இருந்தாலும் வெளியேறிவிடும்.












Click it and Unblock the Notifications