கல்லீரல் கொழுப்பை குறைப்பது எப்படி? Fatty Liver ஆபத்தா?
சென்னை: கல்லீரலில் கொழுப்பை எளிய முறையில் குறைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இயற்கையான முறையில் கல்லீரலில் கொழுப்பே சேர விடாமலும் நாம் லிவரை பாதுகாக்கலாம்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: கல்லீரல் கொழுப்பை எளியமுறையில் கரைக்க வேண்டுமா? சில இயற்கை வழிகள் இதோ...*

பொதுவாக கல்லீரல் நமது உடலை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நாம் சாப்பிடும் உணவில் நல்லவை மற்றும் கெட்டவை எது என தரம் பிரித்து வெளியேற்றும் வேலையை செய்கிறது.
கல்லீரல் நமது உடலில் பல இயக்கங்களை கவனித்துக் கொள்கிறது. இது சரியாக செயல்படாத நேரத்தில் நமது உடலில் பல இயக்கங்கள் பாதிக்கப்படும்.
குறிப்பாக கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படியும் பொழுது அது மிகப்பெரிய உடல்நல பிரச்சனையாக மாறும் வாய்ப்புகள் அதிகம். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு தேக்கம், கல்லீரல் அழற்சி, கல்லீரல் சேதம் மற்றும் காயங்களை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இது கல்லீரல் செயலிழப்புக்கு வழி வகுக்கிறது.
எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அதற்கு ஒரு சில இயற்கை வழிகள் உள்ளது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
கோதுமை புல்லில் அதிகமான குளோரோபில் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான கல்லீரலை பாதுகாக்க இது உதவி புரிகின்றது.
பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் மற்றும் பீட்டாலைன்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளது. இதன் மூலம் ஆக்ஸிடேட்டிவ் டேமேஜ் மற்றும் கல்லீரல் வீக்கம் போன்றவற்றை சரி செய்கின்றது.
சிகப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் இது உங்களின் ஆன்டிஆக்ஸிடன்ட் அளவை உயர்த்துவது மட்டுமின்றி, கல்லீரலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது.
காளிஃப்ளவர், ப்ரோக்கோலி கல்லீரலுக்கு நல்லது. இவை கல்லீரலின் இயற்கையான நச்சு நீக்கும் என்சைம்களை அதிகப்படுத்துவது மட்டுமின்றி, கல்லீரல் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது.
நட்ஸ் வகைகளிலேயே கல்லீரலுக்கு அதிக நன்மை விளைவிக்க கூடியது வால்நட்ஸ் தான். இது கொழுப்பு நிறைந்த கல்லீரலை குறைப்பதற்கு உதவுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications