Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்மூலம், வெளிமூலம்! எதுவாக இருந்தாலும் புடலங்காய் போதும்! 12 நாள் கேப்விட்டு சாப்பிடுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புடலங்காயை சாப்பிட்டால் எந்த மூலமாக இருந்தாலும் கருகி விழுந்து விடும். இதை 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள்.

இதுகுறித்து குந்தவி என்பவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

health snake guard

புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

மஞ்சள் காமாலை

அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.

புடலை இலை

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும். புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

பொரியல்

புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

காய்ச்சலை நீக்கும்

கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250 கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200 மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயிற்றுப்பூச்சிகளை நீக்கும்

இந்த புடலங்காய் நாட்டுக்காயாகும். வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றும் தன்மை உண்டு, மாரடைப்பைத் தடுக்க வல்லது. புடலங்காயில் மருத்துவ வேதிப் பொருட்கள் உள்ளன. விட்டுவிட்டு காய்ச்சல் வரும் போது அடிக்கடநி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கிவிட்டு சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்.

இதயத்திற்கு நல்லது

புடலங்காய் இதயத்திற்கு நல்லது. இதய நோயாளிகள் 48 நாட்களுக்கு இதை சாப்பிடுவதால் நலம் பெறுவர். உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. இதில் வைட்டமின்கள், கரோட்டீன்கள், சரும ஆரோக்கியத்திற்கு நன்மையை கொடுக்கும். பொடுகு தொல்லையை போக்கும் குணம் கொண்டது.

கெட்ட நீர் , கழிவுகள்

புடலங்காய் தேவையற்ற கழிவுகளையும் கெட்ட நீரையும் உடலில் இருந்து வெளியேற்றும். இது அலசர் நோயை தீர்க்கும். சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுத்து சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது. புடலங்காய் மூட்டு வலிக்கும் முழங்கால் வலிக்கும் தீர்வாக அமைகிரது. திருமணமான தம்பதி முருங்கை கீரையுடன் புடலங்காயை சேர்த்து சாப்பிட்டு வர உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். இந்த காயை சாப்பிட்டால் நீண்ட தூர பயணத்தின் போது ஏற்படும் கால் வீக்கம் தீரும்.

வெள்ளை அணுக்கள்

இந்த காயை சமைத்து சாப்பிட்டால் வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரித்து நாள்பட்ட நோய்கள், தொற்றுகளை நீக்கும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+