ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு "தேவாமிர்தம்".. நோ குடல் ஆபரேஷன்! பழைய சோறே மருந்து
சென்னை: 80 சதவீதம் குடல் நோய்களுக்கு பழைய சோறு நல்ல தீர்வாக அமைவதாக சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பழைய சோறும் பச்சை மிளகாயும் அருமையான காம்பினேஷன். அதிலும் கோடை காலத்தில் வயிற்றுக்குள் ஒன்றரை டன் ஏசியை போட்டது போல் குளுகுளு என இருக்கும். இதை தேவாமிர்தம் என்றும் அழைப்பார்கள்.

அந்த காலத்தில் பழைய சோறு, நீராகாரம் உள்ளிட்டவற்றை குடித்துவிட்டுதான் கடுமையான பணிகளை மூதாதையர்கள் மேற்கொண்டனர். இந்த நீராகாரத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இந்த பழைய சாதத்தை இரவு மிஞ்சும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி அதை காலையில் அந்த தண்ணீருடன் உப்பு போட்டு குடிக்கலாம்.
இந்த உணவுக்கு பெஸ்ட் சைடுடிஷ்- வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், மாங்காய் உள்ளிட்டவைதான். இந்த உணவுடன் விருப்பப்பட்டால் மோரோ அல்லது தயிரோ சாப்பிட்டால் போதும். அத்தனை அற்புதமாக இருக்கும். பிரியாணிலாம் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு இந்த நீச்சதண்ணீர் சுவையாக இருக்கும்.
வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. அல்சர் இருப்பவர்கள் பச்சை மிளகாயை எடுத்துக் கொள்ளாமல் வெங்காயத்துடன் இந்த பழங்கஞ்சியை குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. மூளை செல்களுக்கு உகந்தது. இரவு முழுக்க அந்த சாதம் நீரில் ஊறினால்தான் சத்து கிடைக்கும். ஒரு சிலர் சாதத்தில் இரவே நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு காலையில் அந்த தண்ணீரை வடித்துவிட்டு புதிய தண்ணீரை ஊற்றி குடிப்பர்.
அது மிகவும் தவறானது, பலனே அளிக்காது. ஏழைகள், வறுமையில் இருப்பவர்கள் மட்டுமே இந்த பழைய சோற்றை சாப்பிடுவார்கள். இன்றும் ஹோட்டல்களில் கூட பழைய சோறு, கூழ், களி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் இந்த பழைய கஞ்சியை மண் பாண்டத்தில் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்து சாப்பிடலாம்.
இந்த பழைய சோறு தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. அதில் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த பலருக்கு அறுவை சிகிச்சையே தேவை இல்லை என பரிந்துரைக்கும் அளவுக்கு அளப்பரிய மாற்றத்தை இந்த பழைய சோறு ஏற்படுத்துகிறதாம்.
இதுகுறித்து இரைப்பை குடல் அறுவை சிகிச்சை தலைவர் ஜஸ்வந்த் கூறுகையில் 20க்கும் மேற்பட்டோருக்கு குடலில் உள்ள அலர்ஜி, புண்கள் காரணமாக குடல் புண்ணாகி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் பழைய சோற்றை கொடுத்து அறுவை சிகிச்சையே இல்லாமல் அவர்களை காப்பாற்றி வருகிறோம்.
இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ 2.77 கோடி நிதியுதவி பெறப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு அவர்களின் உணவு பழக்கத்தால்தான் குடல் நோய் வந்தது தெரியவந்தது. இதனால் சிறிய மண் பானையில் பழைய சோற்றை கொடுத்தோம். அவர்கள் தற்போது உடல்நலம் பெற்றுள்ளனர்.
பழைய சோற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் எத்தனை சதவீதம் உள்ளன என்பதை துல்லியமாக காண்பதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இந்த கஞ்சியை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். பழைய மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாகும். 80 சதவீத குடல் நோய்களுக்கு அருமருந்தாக பழைய சோறு உள்ளதாக மருத்துவர் ஜஸ்வந்த் தெரிவித்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications