நீர்த்து போன விந்து கெட்டிப்படணுமா? வைரம் பாய்ந்த கட்டை! "இந்த" மரத்தின் பட்டைக்கு இத்தனை வலிமையா?
சென்னை: கருங்காலி கட்டைகள், குச்சியில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இந்த மரமே லட்சுமியின் அம்சமாக சொல்லப்படுகிறது.
கருங்காலி மரம்.. மிகவும் பழமையான மர வகையை சேர்ந்தது. இதன் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பகுதி கருமையாக இருக்கும். இந்த பகுதியை வைத்துதான் சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்களை செய்து வருகிறார்கள்.

பழைய காலத்தில் உலக்கை கூட கருங்காலி மரத்தில்தான் செய்து பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களை இடிப்பதால் அந்த பொருட்களும் மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் என்பது நம்பிக்கையாக வைத்திருந்தனர்.
ஆனால் இப்போது கருங்காலி மரங்கள் விலை உயர்ந்ததாக இருப்பதால் அதை விட்டுவிட்டு உலக்கைகள் வேறு மரங்களில் செய்யப்படுகின்றன. இந்த கருங்காலி மரங்களுக்கு கதிர்வீச்சுகளை சேமிக்கும் சக்தி இருக்கிறது. இந்த மரத்தின் வேர், பட்டை, பிசின் ஆகியவை மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இவை துவர்ப்பு தன்மை கொண்டிருக்கும். ஆனால் நீரிழிவு, வயிறு தொடர்பான நோய்கள், ரத்த குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களும் சரியாகும். கருங்காலி மரத்தின் வேரை சுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றுப்புண்கள் நீங்கும். வயிற்று பகுதியில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் இந்த கசாயத்தை தினமும் இரு வேளை அருந்தினால் போதும் சர்க்கரையின் அளவு குறையும். ரத்தத்தில் இரும்பு சத்தை அதிகரிக்கும் தன்மை இந்த கருங்காலிக்கு உண்டு. கருங்காலியின் பிசினை பொடியாக்கி தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவாகும். நீர்த்து போன விந்து கெட்டியாகும்.
விந்து நீர் வெண்மை நிறத்தில் சற்று கெட்டியாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அதில் நிறைய உயிரணுக்கள் இருக்கும். இது குழந்தை பிறத்தலுக்கு உதவி செய்யும். அது போல் பெண்களின் கர்ப்பப்பையும் வலுபெறும்.ரத்த போக்கு அதிகமாக உள்ள பெண்கள் இந்த பிசினை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். அத்துடன் பெண்களுக்கு கரு உருவாக வழி செய்யும். வெள்ளைப்படுதலும் நீங்கும். உடல் வலியை போக்கும்.
உடலில் உள்ள தேவையற்ற கெட்ட நீரை வெளியேற்றும். வாய்ப்புண்ணையும் நீக்கி வாய் துர்நாற்றத்தை போக்கும். இதய நோயாளிகளுக்கு அருமருந்து. கருங்காலி பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் உள்ளிட்டவைகளை சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி குடித்தால் இருமல் நீங்கி சுவாச நோய்களும் காசநோய்களும் ஓடி போகும்.
இந்த கருங்காலி குச்சிகள் நேர்மறை எண்ணங்களை நம்முள் புகுத்தும். கோயில் கலசங்களில் கருங்காலி கட்டைகளை போட்டு வைப்பார்கள். இது கதிர்வீச்சுகளை தன்னுள் கிரகிக்கும் தன்மை கொண்டது என்பதால்தான். இவை மாலைகளாகவும் இருக்கின்றன. இவற்றை பயன்படுத்தி பயனடையுங்கள். போலிகளும் உலா வருவதால் ஜாக்கிரதையாக இருங்கள்.












Click it and Unblock the Notifications