விதைப்பை வீக்கம்.. கருப்பை நீர்க்கட்டி.. கழற்சிக்காய் என்ற வரப்பிரசாதம்.. கசப்பு காயின் இனிப்பு பலன்
சென்னை: இயற்கை மூலிகையான கழற்சிக்காய்களின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? இதை எப்படி பயன்படுத்துவது?
பார்ப்பதற்கு கோழி முட்டைபோலவே இருக்கும் இந்த கழற்சிக்காய்களின் உள்ளே பருப்பு போல காணப்படும். மிகவும் கசப்பு தன்மை வாய்ந்த இந்த பருப்புதான், பல நோய்களை விரட்டுகிறது.

காய்கள்: இந்த காய்களை உடைப்பது அவ்வளவு சுலபமில்லை.. கடினமாக இருக்கும்.. பெரிய கல், அம்மிக்கல் போன்ற கனமான பொருளை வைத்துதான், காய்களை உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை வெளியே எடுப்பார்கள். இந்த பருப்புகளை காயவைத்து அரைத்து, பவுடராக்கி வைத்து கொண்டால், பல உடல்நலக்கோளாறுகளுக்கு மருந்தாக உபயோகப்படும்.
சமீபகாலமாகவே, பிசிஓடி என்று சொல்லக்கூடிய கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் இளம்பெண்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.. பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் என்பார்கள். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறைவதால், பெண்களுக்கு உடலில் குறைவதாலும், ஆண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் அளவு அதிகமாக சுரப்பதாலும், இளம்பெண்களுக்கு சினைப்பையில் சிறுசிறு நீர்க்கட்டிகள் உண்டாகின்றன.
இதனால், பெண்களுக்கு முகத்திலும், உடல், வயிறு பகுதிகளிலும் தேவையற்ற முடிகள் வந்துவிடும்.. உடல் எடை அதிகரிப்பது, தலைமுடி கொட்டுவது, ஒழுங்கற்ற மாதவிடாய், உள்ளிட்ட பல உபாதைகள் வந்துவிடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், கருத்தரிப்பதில் சிக்கலை உண்டுபண்ணிவிடும்.
எனினும், இயற்கையான முறையில், இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை அகற்றுவதற்கு கழற்சிக்காய்கள் உதவுகின்றன.. கழற்சிக்காய் பருப்பு பவுடரில், கால் ஸ்பூன் மிளகு தூள், சிறிது தேன் கலந்து, குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். இந்த உருண்டையை தினமும் 2 வேளையும், 2 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, கர்ப்பப்பையில் உருவாகியிருக்கும் நீர்க்கட்டிகள் கரைந்துவிடும்.
புண்கள்: சருமத்தில் ஏற்படும் கொப்புளங்கள், காயங்கள், புண்களுக்கும் இந்த பவுடர் உதவுகிறது.. இந்த விதைகளை, ஒரு வாணலில் வறுத்து, அதை பொடி செய்து, தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோயும் விலகிவிடுமாம்.
அதேபோல, ஆண்களுக்கு விரைவாதம் பிரச்சனைக்கும் இந்த கழற்சிக்காய் உதவுகிறது.. இந்த காய்களின் விதைகளை லேசாக வாணலில் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
டாக்டர் ஆலோசனை: இந்த பவுடரில் சிட்டிகை அளவு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே விரைவாதம் நீங்குமாம். எனவே, கழற்சிக்காயை மருந்தாக உட்கொள்ளும் முன்பு, மருத்துவரின் முறையான ஆலோசனையின் பேரில் மருந்தாக எடுத்துக் கொண்டால், ஆரோக்கியத்தில் கோடிபலன் கிடைக்கும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications