உள்ளுறுப்புகளை க்ளீன் செய்யும் கிழங்கு.. எப்பேர்ப்பட்ட விஷக்கடிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலை
சென்னை: சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை நிறைய சாப்பிட்டால் என்னாகும்? சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலைகளை சாப்பிடலாமா? அதைபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சர்க்கரைவள்ளி கிழங்கினை தினமும் உண்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில் இதில் அதிக அளவில் போலெட்ஸ் நிறைந்துள்ளது. செரிமான கோளாறுகளை சரிசெய்து, எதிர்ப்பு மண்டலத்தையும் பராமரிக்க இந்த கிழங்கு உதவுகிறது, தைராய்டு சுரப்பி, பற்கள், நரம்புகள், எலும்புகளுக்கு பலத்தை தரக்கூடியது..

வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கசெய்வதிலும், புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் பங்கு மிக அதிகமாக உள்ளன. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இந்த கிழங்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகின்றன.
சிறுநீரகம்: இத்தனை சத்துக்கள் இருந்தாலும், சர்க்கரை வள்ளிக்கிழங்கை அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.. காரணம், இதில், ஆக்சலேட் எனப்படும் கரிம அமிலம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகத்துக்கு நல்லதல்ல.. அதிலும், சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்..
இதைத்தவிர, ஆன்டி ஆக்ஸிடன்ட் சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ளதால், இதை அதிகமாக சாப்பிட்டால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..
பொட்டாசியமும், வைட்டமின் ஏ சத்துக்களும் இதில் நிறைய உள்ளன.. பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், மாரடைப்பு வரை அபாயம் ஏற்படலாம்.. A வைட்டமின் நிறைய சாப்பிட்டால், புருவங்களில் முடி உதிர்தல், உதடு வெடிப்பது போன்ற பிரச்சனை வரலாம்.. ஆகமொத்தம் நிறைய கிழங்கு சாப்பிட்டால் அஜீரணம், மந்தநிலை முதல் கல்லீரல் பாதிப்பு வரை ஏற்பட்டுவிடும் என்பதால், அளவுடன் சாப்பிடுவது சிறந்தது.
கல்லீரல்: ஒருவேளை கல்லீரல் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்கனவே இருப்பவர்கள் இதனை எடுத்துக்கொண்டால், விளைவுகள் மோசமாகலாம்.. மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான கோளாறு, வயிறு உபாதைகள் போன்றவையும் ஏற்படலாம்.. நார்ச்சத்து அதிகம் என்றாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது கிடையாது.
சர்க்கரைவள்ளி கிழங்கைவிட, அதன் இலைகளிலேயே அதிக சத்துக்கள் உள்ளதாம்.. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் C, K, பொட்டாசியம், சோடியம், போரேட் அடங்கி உள்ளது. இந்த கிழங்கின் இலை விஷக்கடிக்கு மருந்தாகிறது. தேள், பூச்சி போன்ற விஷஜந்துக்கள் கடித்துவிட்டால், இந்த இலையை பச்சையாக அரைத்து கட்டுவதால் விஷம் முறியுமாம்.. வலி, வீக்கமும் குறையும் என்பார்கள்.
பேஸ்ட்: அதேபோல, தோலில் ஏதாவது அலர்ஜி, அரிப்பு வந்தாலும், இந்த இலையை உபயோகப்படுத்தலாம்.. அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கையே, நன்றாக வேக வைத்து மசித்து, அதனுடன் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.. விழுதுபோல சுண்டி வந்ததுமே, அதை அலர்ஜி, அரிப்புள்ள இடத்தில் தடவினால் தீர்வு கிடைக்கும்
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications