பனங்கிழங்கு பெஸ்ட்.. பித்தம் கெட்டால் ரத்தமும் கெடுமாம்.. பித்தத்தை பஞ்சாய் போக்கும் சூப்பர் உணவுகள்
சென்னை: உடலில் பித்தம் அதிகமாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இயற்கையான முறையில் இந்த பித்தத்தை தீர்க்க வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?
உடலில் பித்தம் அதிகமானால், ரத்தம் கெடும் என்பார்கள்.. பித்தம் அதிகமாகிவிட்டால், பசி எடுக்காது, வாய் கசப்பாக இருக்கும்.. செரிமானம் சீராக நடக்காது.. கண் எரிச்சல், தலைசுற்றல், பாத எரிச்சல், போன்ற தொந்தரவுகள் அதிகமாகிவிடும்.
இதற்கு பிரதானமாக உதவுவது இஞ்சியும், எலுமிச்சம்பழமும் ஆகும்.. இஞ்சி துண்டை தேனில் ஊற வைத்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே பித்தம் தீரும் என்பார்கள்.. அதேபோல, இஞ்சியில் சாற எடுத்து, வெங்காய சாறுடன் சேர்த்து, தேன் கலந்து குடித்தாலும் பித்த மயக்கம் குறைய துவங்கும்..

இஞ்சி : எலுமிச்சம் பழத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்... அல்லது எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து, இந்த மோரை குடித்து வந்தாலும், பித்தம் தணியும்.
அல்லது தோல் சீவப்பட்ட இஞ்சி 50 கிராம், சீரகம் 50 கிராம், காட்டு சீரகம் 50 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம், இந்துப்பு 50 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும், இவைகளை எலுமிச்சை பழச்சாற்றில் ஊறவைத்து, அதை வெயிலில் உலரும் வரை காயவைத்து, பின்னர் பொடித்து கொள்ள வேண்டும். இதில், தினமும் கால் ஸ்பூன், 2 வேளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே, பித்தம் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களும் விலகிவிடும்.
அகத்திக்கீரை: கீரைகளில் அகத்திக்கீரையை அடிக்கடி உணவில் சாப்பிட்டாலும் பித்தம் நீங்கும். கரிசலாங்கண்ணி கீரையும் பித்தத்துக்கு நல்லது.. பழங்களில், கமலா ஆரஞ்சு பழத்துக்கு உடலில் பித்தத்தை நீக்கி, குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை உள்ளது.. மாம்பழத்தை சாறு பிழிந்து, அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி ஆறவைத்து சாப்பிட்டு வந்தாலும் பித்தம் குறையும். அதேபோல, விளாம்பழம் கிடைத்தால் கட்டாயம் சாப்பிட வேண்டும்.. இதுவும் பித்தத்தை குறைக்கிறது.
பனங்கிழங்கில் பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளன.. கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்கக்கூடியதுடன், பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும் என்பார்கள்.. இந்த கிழங்குடன், சிறிது மிளகு மற்றும் பூண்டுகளை கலந்து சாப்பிட வேண்டுமாம்
கஷாயம்: அதேபோல, பொன்னவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் போன்றவற்றை வைத்து, கஷாயம் போல வைத்து குடிக்கலாம்.. ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது. பொதுவாக இப்படி கஷாயம் குடிப்பதானால், வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இப்படி மருந்துகளை உட்கொள்ளும்போது, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிடுவதே ஆரோக்கியமாகும்.












Click it and Unblock the Notifications