மீனுக்கும், பூனைக்கும் என்னாச்சு.. ஜிலேபி மீனை விடுங்க.. சென்னையில் சுருண்டு சுருண்டு விழும் பூனைகள்
சென்னை: மழைக்காலம் என்பதால், புதுபுது வைரஸ்கள் உருவாகி பரவி கொண்டிருக்கின்றன. அந்தவகையில், மீனுக்கும், பூனைக்கும் வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.
ஒரு கிலோ ஜிலேபி மீன் ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கிறது... திலேபியா (Tilapia) என்ற மீனைதான் ஜிலேபி மீன் என்பார்கள். அதனால், இந்த மீன் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.. ஆனால், கடந்த 2 நாட்களாகவே, ஜிலேபி மீன்களை வைரஸ் தாக்கி வரும் செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன..

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் பண்ணைகளில் உள்ள குளங்களில் வளர்க்கப்படும் ஜிலேபி மீனை, திலாப்பியா பார்வோ என்ற வைரஸ் தாக்கியிருப்பது, இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஜிலேபி மீன்: இது அதிக அளவில் இறப்பு விகிதத்தையும் ஏற்படுத்தக்கூடியதாம்.. அங்குள்ள பண்ணைகளில் 10 குளங்களில் இருந்து, மீன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில், 8 குளங்களில் உள்ள மீன்களில் திலாப்பியா பார்வோ வைரஸ் மீன்களை தாக்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இந்த வைரஸ் தாக்குவதால் பண்ணையில் 30 முதல் 50 சதவீத மீன்கள் வரை இறக்கிறது.
எனவே, புதிய வைரஸூக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை தொடங்க வேண்டும், இந்த வைரஸ் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இந்த பீதியே இன்னமும் நீங்காத நிலையில், சென்னையில் பூனைகளை, புது வைரஸ் தாக்கி கொண்டிருக்கிறதாம்.

பூனைகள்: அந்த வைரஸின் பெயர், பெலைன் பார்வோ என்பதாகும்.. பெலைன் பான்லூகோபீனியா என்றும் சொல்கிறார்கள்.. இந்த வைரஸ்கள், சிறிய பூனை முதல் பெரிய பூனை வரை தாக்கி வருகிறது.. இந்த வைரஸ் தாக்கிய பூனைகளுக்கு, காய்ச்சல், ஆழ்ந்த மனச்சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும்.. இப்போது பல பூனைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கும், சில பூனைகளுக்கு ரத்தக்கசிவுடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.
கடும் காய்ச்சல்: இது ஒரு தொற்றக்கூடிய வைரஸ் என்கிறார்கள்.. சிகிச்சை தந்தாலும்கூட, 60 சதவீத பூனைகள் மட்டுமே பிழைக்கிறதாம்.. குளிர்காலம், பருவமழை சமயங்களில் இப்படி வைரஸ் பரவுமாம். அதிலும், 3 முதல் 5 மாதம் வயது கொண்ட பூனைகளே அதிகம் பாதிக்கின்றனவாம்.. பூனைக்கு காய்ச்சல் வந்தால், பாராசிட்டமால் மாத்திரை போன்றவை எதுவும் தராமல், உடனடியாக சிகிச்சை தரப்பட வேண்டும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications