Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரொம்ப ஈஸி.. உடல் எடையை குறைக்கணுமா? ‛ஸ்லிம்’ ஆக மாற இந்த 5 உணவு பழக்கங்களை தவிர்த்தாலே போதும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நம்மில் பலரும் கூட உடல் எடையை குறைக்க முயற்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளோம். இந்நிலையில் தான் நமக்கே தெரியாமல் நமது உடலில் கொழுப்புச்சத்தை அதிகரிக்க செய்யும் 5 முக்கிய உணவு பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

ஒவ்வொருவரும் அதிக எடையின்றி ‛ஸ்லிம்' ஆக இருக்க விரும்புகிறோம். ஆனால் பலருக்கும் இது நடப்பது இல்லை. இதற்கு முக்கிய காரணம் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பு சத்துகள் தான். இந்த கொழுப்பு சத்துகள் தான் உடல் எடையை அதிகரிப்பதோடு, நாளடைவில் பல நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

Trying to lose weight? 5 food habits should be avoid that are making you fat, list here

இதனால் தான் இன்றைய காலத்திலும் அதிக உடல் எடையை குறைப்பதற்காக ஜிம் செல்வதோடு, பலரும் ‛டயட்' எனும் உணவு கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற தொடங்கி உள்ளனர். ஆனாலும் கூட ‛‛என்னங்க இது.. தினமும் உடற்பயிற்சி செய்யுறேன். கலோரிகளை கணக்கிட்டு ‛டயட்' வகை உணவுகளை தான் எடுத்து கொள்கிறேன். ஆனாலும் பாருங்க உடல் எடை மட்டும் குறயைவே இல்லை'' என பலரும் புலம்புகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் அவர்கள் பின்பற்றும் உணவு பழக்க வழக்கங்கள் தான். அதாவது ‛டயட்' வகை உணவாக இருந்தாலும் கூட சில பழக்க வழக்கங்கள் உடல் எடையை குறைக்க உதவுவது இல்லையாம். இதனால் தான் உடல் பருமன் அப்படியே இருக்கிறது. இதனால் நாம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க அல்லது உடல் எடையை குறைக்க விரும்பினால் 5 முக்கிய உணவு பழக்க வழங்கங்களை பின்பற்றுவது அவசியமாகும். அதன் விபரம் வருமாறு:

முதல் பாயிண்ட்: அதாவது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ட்ரீட்களில்(விருந்து) வழங்கப்படும் கேக் உள்ளிட்ட இனிப்பு வகை உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். எப்போதாவது தானே சாப்பிடுகிறோம் என நண்பர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து நாம் இந்த வகை உணவுகளை எடுத்து கொள்ளும்போது மகிழ்ச்சியில் அளவுக்கு அதிகமாக சுவைக்கலாம். ஏற்கனவே இந்த வகை உணவுகளின் பாதிப்பு என்பது நாம் அறிந்ததை விட அதிகம். அதாவது நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை எளிதாக அதிகரிக்கின்றன. இதனால் 2ம் வகை சர்க்கரை நோய்க்கு வழிவகுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் முட்டுக்கட்டையை போட்டுவிடும்.

2வது பாயிண்ட்: கலோரிகளில் அதிக கவனம் செலுத்துவது. அதாவது உடல் எடை அதிகரித்து விடும் என கலோரி கணக்கீட்டு நாம் உணவு எடுத்து கொள்கிறோம். இந்த வேளையில் மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் அடங்கிய உணவை நாம் அதிகமாக எடுத்து கொள்ளலாம். இது உடலில் உள்ள சர்க்கரை அளவில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தும். மேலும் அதிகப்படியான பசியை தூண்டுவதோடு, மாவுச்சத்து அல்லது இனிப்பு வகை உணவுகளை சுவைக்க தூண்டுவதோடு, உடல் எடையையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

3வது பாயிண்ட்: இது உணவு தேர்வை குறிக்கும். அதாவது விளம்பரத்தை பார்த்து உணவு தேர்வு செய்யும் பழக்கம் நம்மிடம் உள்ளது. உதாரணமாக ஷாப்பிங் சென்றால் ‛No Added Sugar' என எழுதப்பட்ட லேபிளை பார்த்தவுடன் அதில் சர்க்கரை இல்லை என வாங்கி நாம் உணவில் சேர்த்து கொள்கிறோம். இதனை தவிர்க்க வேண்டும். மாறாக அந்த உணவின் உண்மையான நிலையை அறிந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் கிரானோலா, பழச்சாறு, சில வகையான யோகர்ட்ஸ்(தயிர்), உலர் பழங்களில் கூட சர்க்கரையின் அளவு என்பது நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கிறது. இதனை அறிந்து நாம் அந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

4வது பாயிண்ட்: பொதுவாக நாம் வயிறு பசித்த பிறகு தான் உணவு சாப்பிடுவோம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பசி இல்லாவிட்டாலும் கூட உணவை எடுத்து கொள்கிறோம். இது மிகவும் தவறான பழக்கம். குறிப்பாக மனஅழுத்தம், தனிமை, சோர்வாக இருக்கும்போது, இல்லாவிட்டால் யாராவது ட்ரீட் கொடுக்கும்போது நாம் பசியில்லாமலே அதிகப்படியான உணவை எடுக்க வாய்ப்புள்ளது. இது உடல் எடையை அதிகரிக்கலாம். இதனால் பசி வந்த பிறகே உணவு எடுத்து கொள்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.

5வது பாயிண்ட்: இதுவும் உணவு சாப்பிடும் முறையை சார்ந்தது தான். எந்த உணவாக இருந்தாலும் கூட அதனை மெதுவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அலுவலகம் செல்லும் வேகத்திலும், அதிகப்படியான பணிச்சுமையாலும் பலரும் உணவை வேகமாக உட்கொள்வதை வாடிக்கையாக்கி வைத்துள்ளனர். இது மிகவும் தவறான பழக்கமாகும். இவ்வாறு வேகமாக உணவை சாப்பிடும்போது வயிறு நிரம்பிதை மூளைக்கு சமிக்ஞை செய்ய நேரம் இருக்காது. இதனால் நாம் தேவைக்கு அதிகமாக அதாவது வயிறு நிறைய உணவை எடுத்து கொள்ள வாய்ப்புள்ளது. இதுவும் உடல் எடையை குறைப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் உடல் எடையை கூடாமல் கட்டுக்குள் வைக்க இந்த 5 பாயிண்டுகளை பின்பற்றுவது அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+