முருங்கையிலை ஸ்பெஷாலிட்டி.. நம்ப முடியாத "மேஜிக்" பயன்கள்.. யாரெல்லாம் முருங்கைக்கீரையை தவிர்க்கலாம்
சென்னை: முருங்கைக்கீரையிலுள்ள சத்துக்கள் என்னென்ன? மற்ற கீரைகளிலிருந்து இந்த கீரை வேறுபட என்ன காரணம்? முருங்கையிலையை யாரெல்லாம் தவிர்க்கலாம்.. ஒரு குட்டி டிப்ஸ் பார்ப்போம்.
1. ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே இந்த முருங்கையிலையில் நிரம்பி கிடக்கின்றன.

2. மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் C அதிகமாக நிறைந்துள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் உள்ளது போல வைட்டமின் A முருங்கையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இக்கீரையில் அடங்கியிருக்கிறது.
3. மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்த கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
4. முருங்கைக்கீரையில் மற்ற தாவர உணவுகளில் உள்ளதைவிட 25 மடங்கு இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது. செயற்கையாக நாம் சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச்சத்தைவிட, இயற்கையாக இந்த கீரையிலேயே எளிதாக கிடைக்கும் இரும்பு சத்தை நமது உடல் எளிதாகவே கிரகித்து கொள்கிறதாம்.
5. கிட்டத்தட்ட மனித உடலில் 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது. முருங்கை கீரையில் 90 வகையான சத்துக்களும், 46 வகையான மருத்துவ குணமும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
யாரெல்லாம் தவிர்க்கலாம்: அதேசமயம், இத்தனை நன்மைகள் இருந்தாலும் முருங்கைக்கீரையை ஒரு கப் அளவுக்கு மேல் எடுத்து கொள்ள கூடாது. சிலருக்கு எதிர்வினையையும் இந்தக்கீரை ஏற்படுத்திவிடும். அதிகம் சாப்பிட்டால் வயிற்று வலி, வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.
முருங்கையிலுள்ள ஆல்கலாய்டுகள், ரத்த அழுத்தத்தை குறைப்பதாக சொல்கிறார்கள்.. இதயத்துடிப்பையும் குறைக்க செய்துவிடும் என்பதால், இந்த கீரை மற்றும் விதைகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகளும், முருங்கையை அதிகம் சாப்பிடும்போது, நீரிழிவு மருந்தின் வீரியத்தை குறைத்துவிடக்கூடும்.
சாப்பிடக்கூடாது: அதேபோல, பாலூட்டும் இளம்தாய்மார்கள் முருங்கைக்கீரையை தவிர்க்கக்கூடாது என்றாலும், இதன் வேர்கள், பட்டைகள் தவிர்த்துவிட வேண்டும். காரணம், இதிலிருக்கும் நச்சுப்பொருள்களை தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் சென்றுவிடும். அதனால், முருங்கை வேர்கள் உள்ளிட்டவற்றை தாய்ப்பால் காலங்களிலும் பெண்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகளும் உணவில் முருங்கை கீரை சேர்ப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும்.
ரத்த மெலிதலுக்கு சிகிச்சை எடுப்பவர்கள் இந்த கீரை, விதைகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல, அதிகமான முருங்கைக்கீரையை சாப்பிடும்போது, கல்லீரல்,சிறுநீரகத்துக்கு பாதிப்பை தந்துவிடும் என்கிறார்கள். எனினும், இந்த கீரையைவிட, அதன் விதை, பட்டைகளே அதிக உடல்நல பாதிப்பை தந்துவிடுகிறது.
தவிர்க்கலாம்: முருங்கை விதை சாறு, நோயெதிர்ப்பு உயிரணுக்களில் நச்சுத்தன்மைக்கு வழிவகுத்துவிடும். இந்த முருங்கை கீரையை இரவில் சாப்பிடக் கூடாது. மொத்தத்தில் முருங்கைக்கீரையை அளவுடன் உட்கொள்வதே சிறந்த ஆரோக்கியம்.
அதேபோல, இரவில் முருங்கைக்கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள்.. முருங்கைக்கீரையை இரவிலும் சாப்பிடலாம். முருங்கை இலைகள் சத்தானவை மற்றும் நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.. ஆனாலும் அனைவரது உடலும் ஒரே மாதிரியான செரிமானத்தை கொண்டிருக்காது.. செரிமானத்தை பாதிக்கலாம் என்பதால் இரவில் முருங்கைக்கீரை உட்பட எந்த கீரையையும் சாப்பிடக்கூடாது.. எனவே, சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசிப்பது எப்போதும் நல்லது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications