எண்ணற்ற மருத்துவ குணங்கள் மறைந்திருக்கும் வெண்தாமரை பூ.. அதன் வகைகளும், பயன்களும்!
சென்னை: மலர்களிலேயே நீர்நிலையில் அழகாக பூக்கும் ஒரே பூ தாமரை ஆகும். தெய்வ வழிபாட்டில் விஷ்ணு, லக்ஷ்மி, பிரம்மா, சரஸ்வதி, ஆகிய தெய்வங்களின் உருவப்படத்தில் இளஞ் சிவப்பு தாமரை மீது அமர்ந்திருப்பதை பார்க்கலாம். வெண் தாமரை, செந்தாமரை, ஆகாசத் தாமரை, கல்தாமரை என நான்கு வகைகள் உள்ளது. வெண்மையான இதழ்கள் கொண்டது வெண்தாமரை, சிவந்த இதழ்கள் கொண்டது செந்தாமரை என்றும், நீரில் அந்தரமாய் வேரோடி கொத்தாக இருப்பது ஆகாசத் தாமரை என்று கூறப்படுகிறது. கல்தாமரை என்பது மலர் அல்ல, கற்பாறைகளின் வெடிப்புகளில் வளருவதால் இவை கல்தாமரை என்றும், இதன் இலையை தான் பயன்படுத்த முடியும். மேலும் தாமரை பூ ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுவதாக கூறப்படுகிறது.
தாமரை மலர்களில், வைட்டமின் பி, சி, ப்ரோடீன், இரும்புசத்துகள் காணப்படுகின்றன. அதிலும் தாமிர சத்து அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது. வெண்தாமரை இதய மற்றும் மூளை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. செந்தாமரை மூல உஷ்ணத்திற்கு பெரிதும் பயன்படக்கூடியவை. கல்தாமரையின் இலையை காயவைத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை என நீரில் ஒரு சிட்டிகை அளவு கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கும், மூளை பலம் பெறும்.

தாமரை மலர்களில் உள்ள சத்துக்கள்
வெண்தாமரையில் 20 பங்கு தாமிர சத்தும், செந்தாமரையில் மற்றும் ஆகாச தாமரையில் 15 பங்கு தாமிர சத்தும், கல்தாமரையில் மற்றும் மொத்தம் 59 பங்கு தாமிர சத்து உள்ளது. வெண்தாமரை, செந்தாமரை இரண்டிற்கும் ஒரே மருத்துவ தன்மை கொண்டுள்ளது. மேலும் இதன் கிழங்கு, கொட்டை, தண்டு, இலை ஆகிய எல்லாம் பலனளிக்கின்றது.

வலிப்பு, கடுமையான காய்ச்சல்- வெண் தாமரைப்பூ கஷாயம்
குழந்தைகளுக்கு வரும் வலிப்பு, மற்றும் காய்ச்சல் வந்தாலோ, தாமரை பூ கஷாயம் கொடுத்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும். வெண்தாமரையின் மலர்களின் காம்பு நீக்கி, இதழ்களை உலர்த்தி, தண்ணீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி சிறிது சக்கரை கலந்து, காலை-மாலை இருவேளையும், இந்த கஷாயம் குடித்துவந்தால் விரைவில் இப்பிரச்சனை நீங்கும்.

பித்த காசம், தலை முடி உதிர்வை தடுக்கும்
உடலில் பித்தம் அதிகமானால், கண்பார்வை மங்கிவிடும், மேலும் உடல் சூடாகி தலை முடி உதிரும். தாமரையின் இலை, பூவின் சாறு, கிழங்கின் சாறு, இம்மூன்றையும் சம அளவில் எடுத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, நன்கு ஆறியவுடன், எண்ணெய் பாட்டிலில் பத்திரப்படுத்தி, வாரம் 1-2 முறை இந்த எண்ணெயை பூசி தலை குளித்து வந்தால், பிதாகாசம், தலை முடி உதிர்வை தடுத்து, குறைபாடுகளை நிவர்த்தியாகும். இந்த எண்ணெயை ஆறாத இரணங்களில் தடவி வந்தால், ஆறாத இரணமும் ஆறிவிடும்.

இதய நோய்க்கு தாமரைப்பூ லேகியம்
தாமரைப்பூ உலர்ந்தது, காசினி விரை, நெல்லி வித்து, ஆகியவை பசும்பாலில் வேகவைத்து, சிறிது சர்க்கரை, நெய், தேன், எல்லாவற்றையும் சேர்த்து லேகிய பதம் வரும்வரை கிளறி, சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, தினமும் காலை-மாலை சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால், இதய நோய் நீங்கும், உடல் மற்றும் மூளையும் பலம் பெறும். நாட்டு மருந்து கடைகளிலும் இந்த லேகியம் கிடைக்கும்.

கண்ணில் நீர்வடிதல், கண்பார்வை குளிர்ச்சி பெற
கண்ணில் நீர்வடிதல், கண் சிவத்தல், போன்ற குறைபாடுகளுக்கு, தாமரை இதழ்களை பசும் பாலில் காய்ச்சி, இந்த ஆவியை பாதிக்கப்பட்ட கண்களில் காட்டினால், இப்பிரச்சனை குணமாகும், மேலும் தாமரை நாரின் பஞ்சினால் செய்யப்பட்ட திரி நெய் விட்டு ஏற்றப்படும் விளக்கை பார்த்தால், கண் குளிர்ச்சியடையும்.

உடல் வெப்பம் தணிய வெண்தாமரை சர்பத்
பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளைப்படுதல், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளுக்கு வெண்தாமரை சர்பத் குடித்துவந்தால், முற்றிலும் குணமடையும். ஆண், பெண் இருவருக்கும் அதிக வெப்பம் இருந்தால் உடல் உறுப்புகளில் இரணம் ஏற்படும். உடல் வெப்பம் சரிசெய்ய தொடர்ச்சியாக 15-20 நாள் வரை வெண்தாமரை சர்பத் குடித்தால், பூரண குணமாகும்.












Click it and Unblock the Notifications