பறங்கிப்பட்டை.. தோல் வியாதியை துரத்தி துரத்தி ஓட்டும் பரங்கிப்பட்டை தூள்.. அருமை சூரணம் பரங்கி பட்டை
சென்னை: பல்வேறு மூலிகைகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் பலன்களை நமக்கு தருகின்றன.. அந்தவகையில், பரங்கிப்பட்டை சூரணம் மகத்தான மூலிகையாக திகழ்கிறது.
தோல் வியாதிகளை போக்குவதில், பரங்கிப்பட்டைக்கு பெரும் பங்கு உண்டு.. இந்த பட்டையில், வைட்டமின்களும், மினரல்களும் அதிகளவு உள்ளன.. எனவே, பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பரங்கிப்பட்டை சூரணம், மிகப்பெரிய அருமருந்து என்றே சொல்லலாம். மூட்டு மூட்டு வலி, முழங்கால் வீக்கம் உள்ளவர்கள், இந்த பரங்கிப்பட்டையை பயன்படுத்தலாம்..

வாத நோயை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி இந்த பரங்கிப்பேட்டைக்கு உண்டு.. இந்த பரங்கிப்பட்டையில் டீ போட்டு குடிக்கலாம்.. இதனால், உடலுக்கு பலம் கிடைப்பதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது.. அஜீரண கோளாறும் நீங்கும்.. நுரையீரலுக்கு பலம் தரக்கூடிய இந்த பரங்கிப்பட்டை, ஆஸ்துமா உட்பட சுவாச கோளாறுகளை தீர்க்கிறது.. சிறுநீரக பைகளுக்கு பலம் தந்து, சிறுநீரக பாதையையும் சீராக்குகிறது..
தோல் வியாதிகள்: பரங்கி பட்டை சூரணம் என்று நாட்டு மருந்து கடைகளில் பிரத்யேகமாக கிடைக்கிறது.. இதைவைத்து, வாத நோய்க்கான தைலம் தயாரிக்கலாம்.. அதேபோல தோல் வியாதிக்கான மருந்தையும் தயாரிப்பார்கள்.
ஒரு பாத்திரத்தில் டம்ளர் தண்ணீர் ஊற்றி, அரை ஸ்பூன் பரங்கி பட்டை சூரணத்தையும் கொட்டி கொதிக்க விட வேண்டும். கரப்பான், சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது அருமருந்தாக திகழும்.
சொரியாஸிஸ்: இந்த பரங்கி பட்டையின் பவுடரை குளிக்கவும் பயன்படுத்தலாம். பாசி பயிறு மாவு, சீயக்காய் பொடி, பரங்கிபட்டை பொடி இந்த மூன்றையும் சமமாக எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து குளித்து வந்தால், சொரியாஸிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு அரிப்பு குறையும்.. வேறு ஏதாவது தோல் நோய்கள் இருந்தாலும் பறந்துவிடும்.
விதவிதமான தோல் நோய்கள் உள்ளன என்றாலும், அதில் பலரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாவது கரப்பான் நோய் காரணமாகத்தான்.. இதனால் உடம்பெல்லாம் அரிப்பு, நமைச்சல் வந்துவிடும். இதுபோன்ற கரப்பான் நோயை கட்டுக்குள் வைக்கவும், இந்த பரங்கிப்பட்டை கஷாயம் உதவுகிறது. அதை எப்படி செய்வது தெரியுமா?
சூரணங்கள்: அமுக்கிரான் கிழங்கு சூரணம், திரிபலா சூரணம், திரிகடுகு சூரணம், ஓமம், பரங்கிப்பட்டை சூரணம், நீரடி முத்து பொடி, ஜாதிக்காய்பொடி, ஜாதிபத்திரி பொடி, கிராம்பு பொடி போன்றவற்றில் தலா 2 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். 300 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து, தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, இந்த பொருட்களை சேர்த்து, 100 மில்லியாக வரும்வரை கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.
இந்த கஷாயம் கசப்பாகவும், துவர்ப்பாகவும் இருக்கும். இதை குடித்து வரும்போது, கரப்பான் நோய் தீவிரம் குறையும்.. தோல் அரிப்பு, தோல் உணர்ச்சியின்மை தடுப்பு, எரிச்சல் தடுப்பு உண்டாகும்.. ஆனால், இந்த கஷாயம் சாப்பிடும்போது, அசைவ உணவு, கொழுப்பு சார்ந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பார்கள்.
பரங்கிப்பட்டை எண்ணற்ற நலன்களை தருகிறது என்றாலும், மருத்துவர்களின் முறையான ஆலோசனையின் பேரில் மட்டுமே இவைகளை மருந்தாக எடுத்து கொள்ள வேண்டும்.. அதுவே சிறந்த ஆரோக்கியத்துக்கான வழியாகும்..!!












Click it and Unblock the Notifications