கல்லீரலை சுத்தப்படுத்தும்! வறட்டு இருமலை விரட்டும்! கருப்பட்டியில் இத்தனை நன்மைகளா?
சென்னை: பனை நீரிலிருந்து காய்ச்சப்படும் கருப்பட்டியால் எத்தனை நன்மைகள் இருக்கிறது தெரியுமா?
வெள்ளை பொருட்களை விட மற்ற நிற பொருட்களே சிறந்தவை என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது சீனி, அரிசி, மைதா உள்ளிட்டவைகளை பயன்படுத்தினால் உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை பயன்படுத்திக் கொள்ளலாம், கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்டவை உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.

அந்த வகையில் நாம் கருப்பட்டி குறித்து பார்ப்போம். இந்த கருப்பட்டியானது பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருளாகும். அதாவது பதநீரை காய்ச்சி வடிக்கும் போது கருப்பட்டி கிடைக்கும். இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும்.
கருப்பட்டியை தினசரி உண்பதால் நிறைய மருத்துவ குணங்கள் கிடைக்கும். உடலை சுறுசுறுப்பாக மெருகூட்ட உதவுகிறது. வயது வந்த பெண்களுக்கு அதிகரிக்கும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. இடுப்பு எலும்புகள், கர்ப்பப்பையை வலுப்பெறச் செய்கிறது. வயதுக்கு வந்த பெண்களுக்கு கருப்பட்டி, கருப்பு அல்லது வெள்ளை உளுந்து சேர்த்து உளுந்தங்களி செய்து தரலாம்.
கருப்பப்பட்டியுடன் சுக்கு சேர்த்து சாப்பிடும் போது பசியை தூண்டும். நாள்பட்ட வறட்டு இருமல், சளித் தொல்லை நீங்க குப்பை மேனியுடன் கருப்பப்பட்டி சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும். கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும் சக்தி கருப்பப்பட்டிக்கு உள்ளது. கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுகளை வெளியேற்றும். கல்லீரலை சுத்தப்படுத்தும்.
உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க காப்பியில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி போட்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஆண்மையை வீரியப்படுத்துவதில் வல்லமை படைத்தது. கருப்பட்டி ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது. உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கருப்பட்டியில் வெறும் இனிப்பு மட்டும் இல்லை. இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகள் உள்ளன. கருப்பப்பட்டியை சாப்பிட்டால் நம் உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சீராகும். உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் இந்த கருப்பட்டிக்கு உண்டு. கருப்பட்டி வயிற்று புண்களை ஆற்றும். மூலநோய்க்கு அருமருந்து.
கருப்பட்டியை ஓமத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும். குழந்தை பெற்ற பெண்கள் சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். மேனியை பலபலப்பாக்கும்.












Click it and Unblock the Notifications