வெறுப்பேற்றும் வெயில்.. மறந்தும் ’இந்த’ ஐட்டங்களை தொட்றாதீங்க.. அப்பறம் எரியுது மாலா கதைதான்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலம் உச்சத்தில் இருக்கும் நிலையில் பல உடல் உபாதைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடைகாலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற ரீதியில் கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இதை சாப்பிட்டால் குளுகுளுன்னு இருக்கும் என்பது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிர்வதை பார்க்க முடிகிறது.

What are the foods that should not be taken in summer

கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை விட எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே முக்கியம்..

எண்ணெய் உணவுகள்: பொதுவாகவே கோடை காலங்களில் அதிக அளவு எண்ணெய் கொண்ட உணவுகளை சாப்பிடும்போது உடல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக கோடை காலத்தில் உடல் வெப்பநிலையை சமன்படுத்தும் அல்லது குறைக்கும் வகையிலான உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அதிக அளவு காரம் நிறைந்த எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது

இஞ்சி பூண்டு: மிக முக்கியமாக இஞ்சி பூண்டு ஆகியவற்றை கோடை காலங்களில் தவிர்ப்பது நல்லது. கோடைகாலங்களில் அதிக அளவில் இஞ்சியை பயன்படுத்தும் போது அதனால் வாய்ப்புண் மற்றும் குடல்புண் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பூண்டும் உடலுக்கு சூடு தரக்கூடியது என்பதால் அதிக அளவில் பூண்டை எடுத்துக் கொள்ளும்போது வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது. எனவே உணவில் இஞ்சி பூண்டு ஆகியவற்றில் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது.

டீ-காபி: மழைக்காலங்களிலும் சரி வெயில் காலமானாலும் சரி பொதுமக்கள் அதிக அளவில் நாடி செல்வது டீ மற்றும் காபியை தான். குளிர்காலங்களில் கூட காபி டீ அளவாக குடித்தால் பிரச்சனை இல்லை. அதே நேரத்தில் அது உடலில் பித்தம் சூடு ஆகியவற்றை அதிகரிக்கும். இந்த நிலையில் தற்போது வெயில் காலத்தில் டீ காபி ஆகியவற்றை அதிகளவில் குடிப்பது உடல் சூட்டை அதிகரிப்பதோடு அஜீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். மேலும் உங்களது உறக்கத்திலும் பிரச்சினை ஏற்படலாம். எனவே டீ காபிக்கு பதில் இளநீர் பழச்சாரு மோர் ஆகியவற்றை பருகலாம்.

அசைவ உணவுகள்: அசைவ உணவுகளை பொறுத்தவரை பன்றி இறைச்சியைத் தவிர மற்ற அனைத்துமே உடலுக்கு சூடு தரக்கூடியது. எனவே இந்த வெயில் காலத்தில் கோழி, நண்டு, இறால், மாட்டிறைச்சி, ஆட்டின் தலை உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. இவற்றை எடுத்துக் கொள்ளும்போது வெயில் நேரங்களில் உடல் சூடு அதிகமாகி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் இருக்கும் நீர்ச்சத்து முழுவதுமாக வெளியேற வாய்ப்புள்ளது.

மசாலா பொருட்கள்: மிக முக்கியமாக பார்க்க வேண்டியது வெயில் காலங்களில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவை அதிக அளவில் இருக்கும் உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல பச்சை மிளகாய், சீரகம், பட்டை, கிராம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் இருக்கும் உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

சைவத்தில் என்னென்ன?: சைவம் மட்டுமல்ல சைவத்திலும் சில பொருட்கள் கோடை காலங்களில் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. அந்த வகையில் கிழங்கு வகைகள், மாவு வகை உள்ள உணவுகள், கத்திரிக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, ராகி, எள்ளு, மைதா அதிகமாக இருக்கும் உணவுகள், வேர்க்கடலை, கோதுமை ஆகியவற்றையும் முடிந்த அளவு சாப்பிடுவதை தவிர்க்கும் பொழுது உங்கள் உடல் வெப்பமானது சமநிலையில் இருப்பதோடு தேவையற்ற பிரச்சனைகள் வருவதை தவிர்க்கும்

ப்ரிட்ஜ் தண்ணீர்: கோடைக் காலம் என்றாலே அனைவரும் நாடி செல்வது ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீரைத் தான். பொதுவாக வெயில் நேரத்தில் பிரிட்ஜில் இருக்கும் ஐஸ் வாட்டரை எடுத்து குடிக்கும் போது உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்கும். அப்போதைக்கு ஐஸ் வாட்டர் நன்மை தருவது போல இருந்தாலும் இது பிரச்சனை ஏற்படுத்தும். மேலும் பிரிட்ஜில் வைத்து ஐஸ் வாட்டர் குடிப்பது உடல் சூட்டை அதிகரிக்கும். எனவே பானையில் வைத்த குளிர்ந்த தண்ணீரை குடிப்பது நன்மை பயக்கும் இது மட்டுமல்லாமல் பால் பாலாடை கட்டி போன்றவற்றையும் தவிர்ப்பது வெயில் காலத்தில் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுவதை தவிர்க்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+