மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை! அனைத்தையும் பஞ்சாய் பறந்து ஓட வைக்கும் ரம்பை இலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்பை இலையின் மருத்துவ பயன்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? பிரியாணி இலை போல் நீளமாக இருக்கும் இந்த இலை எதற்காக உணவில் சேர்க்கப்படுகிறது. இது எப்படி விளைவிக்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் இலை ரம்பை ஆகும். இதில் ஏராளமான சத்துகள் இருப்பதாக இதை வீட்டு தோட்டத்திலேயே வைக்கலாம். நிழலில் வைத்தால் போதும், நன்கு மளமளவென வளர்ந்துவிடும்.

health rambai leaves

இதை அன்னப்பூர்ணா இலை என்றும் அழைக்கிறார்கள். இது 1.6 மீட்டர் முதல் 4.5 மீட்டர் வரை வளரும் தாவரம் ஆகும். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த தாவரத்தின் இலைகள் வாசனை மிகுந்து காணப்படும்.

இதை குருமா குழம்பு, பிரியாணி, பிரிஞ்சி சாதம், மசாலா போட்டு செய்யும் குழம்புகள் உள்ளிட்டவைகளில் கருவேப்பிலை தாளிப்பதை போல் தாளித்துவிடலாம். இந்த ரம்பை இலையை பயன்படுத்தி மூட்டு வலிக்கு என எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

இந்த எண்ணெயில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இது மூட்டு வலி மற்றும் தசை பிடிப்பு பிரச்சினைகளை தீர்க்கும். ரம்பை இலையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றுகளில் இருந்து காக்கிறது. இந்த இலையில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை எதிர்த்து போராடுகிறது. அந்த வகையில் புற்றுநோய் பரவலுக்கு காரணமான செல்களை அழிக்க இந்த இலை பயன்படுகிறது.

இரு டம்ளர் நீரில் 4 ரம்பை இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி இரு வேளை குடித்து வந்தால் நரம்பு மண்டலம் வலுப்பெறும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. இந்த ரம்பை இலையை தொடர்ந்து உண்டு வந்தால் முடி கொட்டும் பிரச்சினை குறையும். சரும எரிச்சலும் அடங்கும்.

இந்த இலை பாம்பு கடிக்கு விஷத்தை முறிக்க பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் எது உண்மை என தெரியவில்லை. இந்த இலையை நிழலில் காயவைத்து வீட்டில் வைத்தால் போதும் வீடே வாசனையால் தூக்கும்.

இந்த இலைகளை வீட்டு தோட்டத்திலேயே வளர்க்கலாம். அதற்கு அதிகபடியான ஈரத்தன்மையான நிலம் தேவை. ஏதாவது ஒரு மரத்தின் நிழலில் வைத்தாலும் பரவாயில்லை. நன்கு வளரக் கூடியது. ஒரு இடத்தில் வைத்தால் போதும் அருகருகே வேர் விட்டு வளரும்.

இந்த இலைகளில் விட்டமின் ஏ, சி, பொட்டாட்சியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற சத்துகள் உள்ளன. ஆனால் இந்த இலையை பச்சையாக சாப்பிடக் கூடாது. இதை வெளிநாடுகளில் கொத்தமல்லி கட்டுபோல் விற்பனை செய்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+