Vasambu: குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க! வசம்பை எடுத்து நாக்கில் தேயுங்கள்!
சென்னை: குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியை வசம்பு குணமாக்கும் , நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடியது என்பது தெரியுமா? வசம்பின் பெயரை மாலை 6 மணிக்கு மேல் சொல்லக் கூடாது என்பார்கள். இந்த வசம்பை விளக்கில் சுட்டு பயன்படுத்துவார்கள். இதனால் குழந்தைகளை தீய சக்திகள் அண்டாது என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தீபா தங்கராசு என்பவர் கூறியிருப்பதாவது: வயிற்று வலியை குணமாக்கும் வசம்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியை குணமாக்க கூடியதும், நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடியதுமான வசம்பு குறித்து இன்று நாம் பார்ப்போம்.
வசம்புவுக்கு 'பிள்ளை வளர்த்தி' என்ற பெயர் உண்டு. பல்வேறு மருத்துவ குணங்களை உடைய வசம்புவை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து குழந்தையின் நாவில் தடவும் வழக்கம் இருந்து வருகிறது. இவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி சரியாகும். ஞாபக சக்தி கூடும்.
நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடிய வசம்பானது வலியை போக்கவல்லது. பதட்டத்தை தணிக்க கூடியது. நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் வசம்பு, இதய ஓட்டத்தை சீர் செய்யும். சிறுநீரக கோளாறை போக்கும். ரத்தத்தை சுத்தப்படும்.
பிள்ளை வளர்த்தி என கூறப்படும் வசம்பு, செரியாமை, பசியின்மை போக்க கூடியது. வயிற்று மாந்தத்தை சரிசெய்யும் மருந்தாகிறது. பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன், அரை முதல் ஒரு கிராம் வசம்பு பொடி, சம அளவு சுக்கு பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டிய பின் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை குடிப்பதன் மூலம், வயிற்று போக்கு நிற்கும். வாயு பிரச்னை சரியாகும்.
வசம்புவை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதிகமாக சாப்பிடும்போது வாந்தியை உண்டாக்க கூடியது. எனவே, 350 மில்லி கிராமுக்கு மிகாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்புவிற்கு மாங்கல்யா என்ற வடமொழி பெயர் உண்டு. விட்டுவிட்டு வரும் வலியை வசம்பு குறைக்கும். அழுகிற குழந்தைகளுக்கு வசம்பு நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருந்தாகிறது. பக்கவாதத்தை போக்கும் தன்மை கொண்டது.
பிள்ளை வளர்ப்பான் என்ற பெயரை கொண்டது வசம்பு. குழந்தைகளை குளிப்பாட்டும் போது வசம்பை கரியாக்கி தாய் பாலில் கலந்து நாவில் தடவுவார்கள். இதனால், குழந்தைகளுக்கு ஜீரண கோளாறு இருக்காது. நரம்பு மண்டலம் பலப்படும். குழந்தைக்கு வயிற்று வலி இருக்கும்போது வசம்பை கரியாக்கி விளக்கெண்ணெய் சேர்த்து தொப்புளை சுற்றி பத்தாக போடும்போது குழந்தைகள் அழுவதை நிறுத்தும்.
உரைப்பான் என கிராமத்தில் அழைக்க கூடிய வசம்பை கொண்டு நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் டானிக் தயாரிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் வசம்பு துண்டை, 3 அல்லது 4 மணி நேரம் ஊரவைக்க வேண்டும். பின்னர், வசம்பை எடுத்துவிட்டு, வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.இதை குடிப்பதால் மன உளைச்சல் மறைந்து போகிறது. மூளைக்கு இதமான சுகத்தை கொடுக்கிறது. ஞாப சக்தியை அதிகப்படுத்தும். வயிற்று கோளாறு, பேதி, வயிற்றுபோக்கு சரியாகும்.
வசம்பை பயன்படுத்தி இருமல், சளி, அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வசம்பு பொடி, அரை ஸ்பூன் அதிமதுர பொடி, ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டுடன், தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தேனீராக பருகலாம். இது வாயு பிரச்னையை சரிசெய்யும். குடலில் உள்ள புண்களை ஆற்றும். இருமலை தணிக்கிறது. சளியை கரைக்க கூடியது. வயிற்று கோளாறு ஏற்படாது. நோய் தடுப்பு மருந்தாக அமைகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications