இந்த ஒரு இலை மேஜிக்கை பாருங்க! சிறுநீரக கற்களை கரைக்கும்.. ஆஸ்துமாவை விரட்டும்.. இத்தனை பயன்களா?
சென்னை: கற்பூரவள்ளி இலைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் நல்ல பலன்களை அளிக்கும் . இந்த இலையை அப்படியே சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை பார்க்கலாம்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய பிரச்சினையே நெஞ்சு சளியும் வறட்டு இருமலும்தான். பருவநிலை மாறும் போது சளியாலும் இருமலாலும் அவதிப்படுகிறார்கள். இதற்கு எத்தனை மருத்துவம் பார்த்தாலும் அந்த நேரத்திற்கு சரியாகிறது.

ஆனால் இயற்கை மூலிகைகளை கொண்டு சளி தொல்லையையும் இருமல் தொல்லையையும் எப்படி நீக்குவது என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. நிறைய மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் இருக்கும்.
ஆனால் அவற்றின் மகத்துவமே தெரியாமல் இருக்கும். எல்லார் வீட்டிலும் வளர்க்கிறார்கள், அதனால் நானும் வளர்க்கிறேன் என வளர்ப்பார்கள். அப்படி பலரால் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செடி கற்பூரவள்ளி, இதை ஓமவள்ளி என்றும் அழைப்பார்கள். இந்த செடியின் இலைகள் கற்பூரம் போல் வாசனை இருக்கும்.

அது போல் இலைகள் சற்று தடியாக இருக்கும். அதில் சிறிய அளவில் சொனைகள் இருக்கும். இந்த செடி வளர்க்கப்படும் வீடுகளில் இதன் மகத்துவம் குறித்து தெரியும். சளி தொல்லை, இருமல் தொல்லையை நீக்கிவிடும். இந்த இலையை அப்படியே கழுவிவிட்டு சாப்பிடலாம். ஆனால் காரல் எடுக்கும். எனவே குழந்தைகளாக இருந்தால் மிகச் சிறிய இலை பெரியவர்களுக்கு காரம் தாங்கும் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

சிறு குழந்தைகள் இதை சாப்பிடாவிட்டால் அந்த இலைகளின் சாறுகளை எடுத்துக் கொண்டு அதில் தேன் கலந்து கொடுக்கலாம். சொறி, படை, அரிப்பு, தோலில் தொற்று உள்ளிட்டவை ஏற்பட்டால் அதற்கு இந்த இலைகளை எடுத்து சாறு எடுத்து தோல் பகுதிகளில் விட்டு வர வேண்டும் . அவை விரைவில் குணமாகும். மழை காலங்களில் சுவாச பிரச்சினை ஏற்படும்.
சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டை கமருதல் போன்றவை இருக்கும். அவற்றுக்கு சித்த மருத்துவரின் துணையுடன் மூக்கில் கற்பூரவள்ளியின் சாறுகளை விடலாம். குழந்தைகளுக்கு மார்பு பகுதியில் இருக்கும் சளி நீங்கவும், ஆஸ்துமா நோய் நீங்கவும் கற்பூரவள்ளியையும் துளசி இலையையும் சம அளவு எடுத்துக் கொண்டு இலைகளை கழுவி அதை லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை 5 மில்லி கொடுக்கலாம்.
அஜீரண பிரச்சினைகளுக்கும் இது தீர்வை கொடுக்கும். சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகபடியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும். சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கும் மூலிகையாக கற்பூரவள்ளி இருக்கும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications