Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சண்டே கூட தூங்க முடியலயே!" கோடை காலத்தில் இப்படியொரு பிரச்சனை!படுத்தவுடன் தூக்கம் வர இதை செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடைக் காலத்தில் பலரும் தூக்கம் வராமல் அவதிப்படுவோம். கோடையில் மட்டும் ஏன் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

மனித உடல் சிறப்பாக இயங்க நன்றாகத் தூங்குவது அவசியம். போதுமான தூக்கம் இல்லை என்றால் அது பல்வேறு பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தும். ஆனால், கோடைக் காலங்களில் பலருக்கும் தூக்கம் வராது.

What are the things that is affecting our sleep in summer expert answers


தூக்கம்: நம்மில் பலருக்கும் குளிர்காலங்களில் தூக்கம் நன்றாக வரும்.. காலை எத்தனை மணி ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது. ஆனால், கோடையில் பலருக்கும் ஒழுங்காகத் தூக்கமே வராது. பகல் நேரத்தில் கோடை வெப்பத்தில் அலைந்து திரிந்து வந்து இரவு நன்றாகத் தூங்கலாம் என்று பார்த்தால் பலருக்கும் தூக்கம் வராது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவிக்கும் சூழலே இருக்கும்.

ஒவ்வொரு பருவத்தில் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றம் நமது தூக்கத்தைப் பாதிப்பதாக ஆய்வுகள் கூறிய நிலையில் அதைப் பிரதிபலிப்பதாகவே இது இருக்கிறது. கோடைக் காலத்தில் தூங்குவது சவாலானதாக இருக்கும் என்பதை வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் வெப்பம்.. இரவில் வெப்பம் சற்று குறைந்தாலும் இயல்பைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.

உடலுறவை அதிகம் வைத்தால் உடல் எடை குறையும்.. ஆனா கடைசியில் ஒரு ட்விஸ்ட்! மருத்துவர்கள் தரும் விளக்கம்


காரணம் என்ன: இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பொதுவாகவே தூங்குவதற்கு முன் நமது உடலின் வெப்பநிலை சற்று குறையும். தூங்கும் போது அது மேலும் குறையும்.. கோடையில் நமது சுற்றுப்புறத்திலேயே வெப்பம் அதிகமாக இருப்பதால் இந்த செயல்முறை பாதிக்கப்படுகிறது. அதாவது சுற்றிலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் நமது உடல் குளிர்ச்சியடைய அதிக நேரம் ஆகும்.. இது தூக்கத்தைப் பாதிக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஒருவரது தூக்கம் 50 முதல் 58 மணி நேரம் பாதிக்கப்படுகிறது" என்றார்.

அடுத்து நீண்ட நேரம் சூரியஒளி படுவது.. குளிர்காலத்துடன் ஒப்பிடும்போது கோடையில் சூரியன் நீண்ட நேரம் சூரியஒளி நம்மீது படும்.. இது நமது தூக்கத்தைப் பாதிக்கிறது. எப்படி என்று யோசிக்கிறீர்களா? சூரிய ஒளி அதிகரிப்பது மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியைப் பாதிக்கிறது.. இந்த ஹார்மோன் தான் தூக்கத்திற்கான நேரம் வந்துவிட்டதை நமது உடலுக்குக் காட்டும். இதனால் தூங்கும் நேரம் வந்துவிட்டதை நமது உடலால் உணர்ந்து கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

தூக்கத்தைப் பாதிக்கும்: கோடைக் காலங்களில் நாம் நமது வாழ்க்கை முறைகளையும் மாற்றுகிறோம். அதாவது வீட்டில் குழந்தைகள் இருந்தால் விடுமுறை என்பதால் அவர்களுடன் வெளியே செல்வது உள்ளிட்ட காரணங்களால் நீண்ட நேரம் விழித்து இருக்கிறோம். இவை அனைத்தும் உங்கள் உடலின் கடிகாரத்தைப் பாதிக்கும். அதாவது நமது ரோட்டின் மாறுகிறது. இதுவும் தூக்கத்தைப் பாதிக்கும்.

தவிர்க்க என்ன செய்யணும்: இவை எல்லாம் நமது தூக்கத்தைப் பாதிப்பது என்னவோ உண்மை தான். ஆனால், இந்த வெயில் காலங்களில் நாம் சில விஷயங்களை மாற்றினால் போதும் குழந்தை போலத் தூங்க முடியும். முதலில் ரூம் வெப்பத்தை 21-24 டிகிரி செல்சியஸசுக்கு கொண்டு வாருங்கள். அதேநேரம் நீங்கள் ஏசிக்கு நேராகக் கீழே தூங்கக்கூடாது. அது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அடுத்து ஒளி அதிகம் படுவதைத் தவிர்க்கவும்.. சூரியன் மட்டுமல்ல, செயற்கை ஒளியும் கூட மெலடோனின் உற்பத்தியைப் பாதிக்கும். எனவே, மாலை நேரத்திற்குப் பிறகு மின்விளக்கு, மொபைல், டிவி என அடிக்கடி அதீத வெளிச்சத்தை எதிர்கொள்வதைத் தவிர்க்கவும்.. தூங்கும் முன், அறைக்குள் வெளிச்சம் வராமல் தடுக்க திரைச்சீலைகளைப் பயன்படுத்தவும். டிவி, மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற இடையூறுகளை இருக்கக்கூடாது.

குளியலை போடுங்க: இரவில் வெதுவெதுப்பான குளிப்பது நல்ல தூக்கத்தைத் தரும். குளிக்கும் போது உடல் வெப்பம் குறையும். அது சீக்கிரம் தூங்க உதவும். மேலும், தூங்கப் போகும் சில மணி நேரங்களுக்கு முன்பு காபி, டீ உள்ளிட்ட காஃபின் பானங்களை உட்கொள்வதைத் தவிருங்கள். அது தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். மேலும் தூங்கும் முன்பு சிகரெட், மது ஆகியவற்றையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

தினசரி தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். அதுவும் நமக்கு மிகப் பெரியளவில் உதவும் மேலும், இரவு உணவை முன்கூட்டியே உட்கொள்வது மற்றும் லேசான மற்றும் தளர்வான ஆடைகளை அணிவது தூக்கத்தை மேம்படுத்த உதவும். இரவில் ஹெவியான உணவைத் தவிர்த்து லேசான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகம் நீரை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சின்ன சின்ன மாற்றங்களைச் செய்தால் போதும் நன்கு தூங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+