கோடை காலத்தில் முகத்தை.. எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது எப்படி தெரியுமா? அடடே.. இவ்வளவு ஈஸியா!
கோடைக் காலத்தில் சூரிய ஒளி, பகல் வெப்பம், சருமத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
சென்னை: இந்தியாவில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சருமத்தைப் பராமரிக்கும் போது நாம் சில விஷயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். இதனால் கோடைக் காலத்தில் சில முக்கிய நடைமுறைகளைப் பின்பற்றி முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்கலாம்.
இந்த மாசு நிறைந்த உலகில் நமது சருமம் மிக எளிதாக மாசடைந்து விடுகிறது. காற்று மாசு, நீர் மாசு என்று அனைத்துமே நமது சருமத்தை மிக மோசமாகப் பாதிக்கிறது. இதனால் மிக விரைவில் தோல் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
இதனால் சருமத்திற்குச் சிறப்புக் கவனம் எப்போதும் தேவைப்படுகிறது.. ஒவ்வொரு பருவ காலம் மாறும்போதும் அதற்கேற்ப நாம் நமது சருமத்தைப் பராமரிக்க வேண்டும் என்பதே நமக்கு இருக்கும் பெரிய சவாலாக உள்ளது.

கோடைக் காலம்
இந்தியாவில் கோடைக் காலம் ஆரம்பிக்கும் நிலையில், சருமத்தைப் பராமரிக்கும் போது நாம் சில விஷயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். சூரிய ஒளி, பகல் வெப்பம், வறண்ட, ஈரப்பதமான வானிலை நமது சருமத்தைக் கடுமையாகப் பாதிக்கும். குளிர் காலத்தில் எல்லாம் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது. எனவே, நமது சருமத்தை அதிகம் பாதிக்கும் கோடைக் காலத்தில் கூடுதல் அக்கறையுடன் பராமரிக்க வேண்டும். வெப்பமான கோடைக் காலத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றி சருமத்தைக் காக்கலாம்.

மாய்ஸ்சரைசர்
கோடையில் காற்று பொதுவாக வறண்டதாக இருக்காது என்ற போதிலும், பல்வேறு காரணங்களால் நம் சருமம் வறண்டு போகும். எனவே, லேசான மாய்ஸ்சரைசரை (moisturizer) பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.. மேலும், சருமத்தில் விரிசல் ஏற்படுவதையும் தடுக்க இது உதவும். இந்த வெயில் காலத்தில் நமக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை கடுமையான வெப்பத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பது தான்.. இல்லையெனில் சருமத்தை வேகமாக வயதாகத் தொடங்கும். சில அரிய சந்தர்ப்பங்களில் தோல் கேன்சரையும் உருவாக்கும் ஆபத்து இருக்கிறது.

சன்ஸ்கிரீன்
எனவே, வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்... உங்களுக்குத் தேவையான சன்ஸ்கிரீனை கவனமாகத் தேர்வு செய்யுங்கள்.. அது நமக்கு உரியப் பாதுகாப்பைத் தர வேண்டும். குறைந்தபட்சம் SPF 30 உள்ளதை வாங்குங்கள்.. உதடு பாதுகாப்பும் மற்றொரு அம்சமாக இருக்கலாம். UVA, UVB என்று அனைத்து விதமான சூரிய கதிர்களில் இருந்தும் பாதுகாக்கும் வகையிலான சன்ஸ்கிரீனை தேர்வு செய்யுங்கள். அதுவே நமக்குப் பெரிய பாதுகாப்பை அளிக்கும்.

எக்ஸ்ஃபோலியேட்
வாரத்திற்கு ஒரு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்யலாம். இறந்த செல்களை நமது சருமத்தில் இருந்து அகற்றுவதே எக்ஸ்ஃபோலியேட் முகத்தில் இருக்கும் துளைகளையும் சீர் செய்ய இது உதவுகிறது. மென்மையான மற்றும் இலகுவான எக்ஸ்ஃபோலியண்ட்டுகளை தேர்வு செய்யவும். அது சருமத்திற்கு எந்தவொரு பாதிப்பையும் தராமல் சுத்தப்படுத்தும். கோடைக் காலத்தில் அதிக மேக்கப் போடுவது உங்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் கோடையில் வரும் வியர்வை, முகத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, கோடைக் காலத்திற்கு ஏற்ப மேக்அப்பை குறைக்கவும். இது சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

புற ஊதா கதிர்கள்
அதேபோல கடுமையான வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஆடைகளை அணியுங்கள்.. சருமத்தைப் பராமரிப்பது மட்டும் போதாது, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பதில் ஆடைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அதற்கேற்ப ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள்.. மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். அதேபோல முகத்தை மறைக்கவும் தொப்பி உள்ளிட்ட தேவையான உபகரணங்களை அணிய வேண்டும்.

முகம் கழுவுவது
கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் வியர்வை மற்றும் அழுக்குகளைச் சுத்தப்படுத்தவும், நிம்மதியாக இருக்கவும், தொடர்ந்து முகத்தைக் கழுவுகிறோம். ஆனால், அதற்காக அடிக்கடி முகத்தைக் கழுவ வேண்டாம் என்றும் வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர். ஏனென்றால் முகத்தை அடிக்கடி கழுவுவது சருமத்தின் அத்தியாவசிய ஈரப்பதத்தை இழக்கக் காரணமாக இருக்கும். நமது சருமத்தைக் காக்க நமது உடலே இயற்கையான ஈரப்பதத்தை உற்பத்தி செய்கிறது. அடிக்கடி முகத்தைக் கழுவுவதால் இதைப் பாதித்து சருமம் வறட்சியடைய காரணமாக இருந்துவிடும்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பூனை மீசை மூலிகை கஷாயம் தரும் அற்புதம்! ரத்தத்தில் கிரியேட்டினின், யூரியா அளவை குறைப்பது எப்படி? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஊறவைத்த உலர் திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்க! உடலில் நடக்கும் மாயங்கள் இதோ! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications