Air embolism நர்ஸ் வேடத்தில் காதலனின் மனைவியை கொல்ல வந்த பெண்! நரம்பில் காற்றை ஏற்றினால் என்ன ஆகும்?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசவமான ஓரிரு நாட்களில் பெண்ணை மருந்தில்லாமல் காற்று நிரப்பிய ஊசியை போட்டு நர்ஸ் வேடத்தில் சென்ற பெண் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பயன்படுத்திய ஏர் எம்போலிசம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
கேரளா மாநிலம் திருவல்லாபுல்லு குளங்கரையைச் சேர்ந்தவர சினேகா (25). இவர் கர்ப்பிணி. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக பருமலா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சினேகா அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சுக பிரசவம் நடந்தது. இதனால் அவரை ஓரிரு நாட்களில் வீட்டுக்கு அனுப்புவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி சினேகாவை டிஸ்சார்ஜ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன எனினும் நிற மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சினேகாவும் அவருடைய தாயாரும் அவர்களது அறையில் காத்திருந்தனர். அப்போது வெள்ளிக்கிழமை மாலை செவிலியர் வேடமணிந்த ஒரு பெண், சினேகாவின் அறைக்குள் சென்றார். அங்கு அவருக்கு ஊசி போட முயன்றார். அப்போது டிஸ்சார்ஜ் செய்த பிறகு எதற்காக ஊசி என சினேகாவின் தாயார் கேட்டார்.
அதற்கு அவர் இறுதியாக ஒரு ஊசி போட வேண்டி உள்ளது என அந்த பெண் தெரிவித்தார். ஆனாலும் சினேகாவின் தாயார் தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றார். ஒரு கட்டத்தில் அந்த செவிலியர் வேடமிட்ட பெண் வலுக்கட்டாயமாக சினேகாவின் கையை பிடித்து ஊசியை குத்த முயன்றார். அந்த சிரிஞ்சில் மருந்து இல்லாததை பார்த்துவிட்டு சினேகாவின் தாயார் கத்தி கூச்சிலிட்டார்.
இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வந்து செவிலியர் வேடம் அணிந்த பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் 25 வயதான அனுஷா என்பது தெரியவந்தது. ஏற்கெனவே இரு முறை திருமணமான அனுஷா, சினேகாவின் கணவர் அருணுக்கு தோழி.

கல்லூரி தோழியான அனுஷா, அருணுடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது. தற்போது அவர்களுக்குள் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இருவரும் சேர்ந்து வாழ சினேகா தடையாக இருப்பதால் அவரை கொன்றுவிட்டு அருணை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுஷா திட்டமிட்டிருந்தார். அதன்படி கடைகளில் பறவைகளுக்கு உணவு ஊட்டுவதற்கு என கூறி காலி சிரிஞ்சை வாங்கியுள்ளார்.
அதில் காற்றை நிரப்பி ஏர் எம்போலிசம் மூலம் சினேகாவை கொல்ல முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் அருணிடமும் விசாரணை மேற்கொள்கிறார்கள். அனுஷாவின் இந்த திட்டம் அவருக்கும் தெரியுமா, இல்லை தெரியாமல் நடந்ததா என விசாரணை நடக்கிறது. மருத்துவமனையின் தகவலின்படி சினேகா தற்போது உடல்நிலை சீராக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.
ஏர் எம்போலிசம் என்றால் என்ன? ரத்த நாளங்களை அதிகமாக நீர்த்து போகச் செய்யும் நடைமுறையே ஏர் எம்போலிசம் ஆகும். ரத்த ஓட்டத்தில் காற்று நுழைந்தால் மரணத்தை ஏற்படுத்தும். அந்த காற்றால் நுரையீரல்கள் அதிகமாக விரிவடையும். இதனால் மாரடைப்பு ஏற்படும். இது போல் காற்றை நரம்பில் ஏற்றினால் இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
காற்று நரம்பில் நுழைந்தால் அதனால் நிறைய காற்று குமிழிகள் ஏற்பட்டு ஆங்காங்கே ரத்த ஓட்டம் தடைப்படும். ரத்தம் உறைய தொடங்கிவிடும். இதை முன் கூட்டியே கண்டுபிடிக்க முடியாவிட்டால் மரணம் ஏற்படும்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications