வெயில்ல போனால் கோமா இல்லாட்டி மரணம்.. மோசமான ஹீட் ஸ்ட்ரோக்.. அறிகுறிகள் என்னென்ன? டாக்டர் அட்வைஸ்
சென்னை: ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன, ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கிறது. இப்போது மக்கள் நெருப்பே இல்லாமல் வெயிலில் ஆம்லெட் போடுவது, சப்பாத்தி சுடுவது என செய்து வருகிறார்கள். அது போல் ஏர் கூலருடன் வெளியே செல்வது போன்ற மீம்ஸ்கள் வருகின்றன.

இதனால் மக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியே செல்வோர் ஆங்காங்கே உள்ள பழச்சாறு, கூழ், மோர் கடைகளில் தஞ்சமடைந்து தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் அதிகபடியான வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் வரும் என்கிறார்கள். அப்படி என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
இதுகுறித்து டாக்டர் பூபதி ஜான் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிகபடியான வெப்பநிலையால் ஏற்படக் கூடிய ஆபத்துதான் ஹீட் ஸ்ட்ரோக் ஆகும். பொதுவாக நம் உடலில் ஒரு வெப்பநிலை இருக்கும். அது 98.6 டிகிரி பாரன்ஹீட். செல்சியஸில் 37 டிகிரி செல்சியஸ் ஆகும்.
இந்த 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் போய்விட்டது என்றால் ஹீட் ஸ்ட்ரோக் வரும். இது போல் அதிகபடியான வெப்பம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மரணம் கூட நேர வாய்ப்பிருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 3 வயதுக்குள்பட்ட குழந்தைகள், நீர் சத்து குறைவாக இருப்பவர்கள், இணை நோய்கள் இருப்போர் உடலில் அதிகபடியான வெப்பத்தை அதிகரிக்கும்.
இதனால் ஹீட் ஸ்ட்ரோக் வந்து அவர்கள் மரணமடைய வாய்ப்புள்ளது. அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் அறிகுறிகளை மிதமான அறிகுறி, நடுத்தரமான அறிகுறி, அதிகபடியான அறிகுறி என 3 வகைப்படுத்தலாம். தண்ணீர் தாகம் எடுக்கும், உதடு காய்ந்து நாக்கு வறண்டு போகும். உடலில் வியர்வையே இருக்காது. தோலில் வறட்சி காணப்பட்டு கிராக் இருக்கும் இவை மிதமான அறிகுறியாகும்.
தலைவலி, வாந்தி, வயிற்று வலி, தலைச்சுற்றல் ஏற்படும் இது நடுத்தர அறிகுறிகள். இதே அறிகுறிகள் அதிகபடியாக இருக்கும் போது பல்ஸ், பிபி குறைந்துவிடும். மூச்சு அதிகமாக வாங்கும். பிட்ஸ் வரும், கோமாவுக்கு செல்வார்கள். பேச்சு குழறும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வரக் கூடாது.
சிறிய குழந்தைகளை கூட மேற்கண்ட நேரங்களில் விளையாட அனுப்பக் கூடாது. பருத்தியினாலான , தளர்த்தியான ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்வோரும், வெளியே வேலை செய்வோரும் 3 அல்லது 3.5 லிட்டர் தண்ணீரை குடிக்கலாம். இதை விட மோரில் உப்பு சேர்த்து சாப்பிடலாம். மது குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தின் போது மது நிறைய குடித்தால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.
15 அல்லது 20 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருப்போருக்கு சிறுநீரக பிரச்சினை கண்டிப்பாக இருக்கும். இவர்களுக்கு வெயிலில் செல்லும் போது அதிக வியர்வை ஏற்படுவதால் சோடியம் குளோரைடு உப்பு அதிகபடியாக வெளியே போவதால் வெப்பம் அதிகரிக்கும். இதனால் சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் தொற்றும் இதய பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. சர்க்கரை நோயுடன் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு அதிகபடியான மூச்சு இறைக்கும். ஆக்ஸிஜனின் அளவும் குறைவாக இருக்கும். இவ்வாறு டாக்டர் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications