சாதம் வடித்த கஞ்சி குடித்தால் புற்றுநோய் கட்டி வளர்ச்சி குறையும்!
சென்னை: சாதம் வடித்த கஞ்சியை உட்கொண்டால் ஒரு சில புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இது மலச்சிக்கலையும் தடுக்கிறது. வெயில் காலங்களில் சாதம் வடித்த கஞ்சியை குடித்தால் எனர்ஜியும் கிடைக்கும்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சாதம் வடித்த தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

இரைப்பைக் குடல் அழற்சி
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்
உடல் வெப்பத்தைத் தணிக்கும்
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.
புற்றுநோயைத் தடுக்கும்
வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
மலச்சிக்கல்
சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கார்போஹைட்ரேட்
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
ஞாபக மறதி*
ஆய்வுகளில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஞாபக மறதியைத் தடுக்கும் என்று நிரூபிக்கப்படாவிட்டாலும், ஒருசில செய்திகள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீருக்கு ஞாபக மறதியைத் தடுக்கும் திறன் உள்ளதாக சொல்கிறது. இதனால் தான் நம் தாத்தா, பாட்டியின் ஞாபக சக்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளதோ..?
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சித்த மருத்துவத்தில் வயிற்றை சுத்தப்படுத்த மருந்து கொடுத்த பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் சாதம் வடித்த கஞ்சியில் உப்பு போட்டு குடிக்க சொல்வார்கள்.
செரிமானத்திற்கு நல்லது. இந்த கஞ்சியை ஆற வைத்து முகத்தில் தடவினால் சரும எரிச்சல் மற்றும் முகம் சிவந்து போவதை தடுக்கும். அது போல் இந்த கஞ்சியில் நீர்ச்சத்துகள் உள்ளதால் அவை கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து கூந்தல் வேர்களை வலுவடையச் செய்யும். உடல் சூட்டை தணிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பொருளை மேற்பூச்சாகவோ உள்ளுக்குள் எடுத்துக் கொள்வதையோ செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்வதே பாதுகாப்பானது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications