2 வாரம் மட்டும் சுகரை கட் செய்யுங்கள்.. உங்க உடம்பு மொத்தமா மாறிடும்.. வெயிட் கூட சட்டுனு குறையுமாம்
டெல்லி: சுகர் தான் உலகின் மிகப் பெரிய போதை (addiction) என்கிறார்கள் மருத்துவர்கள். நமது உணவில் நாம் சர்க்கரையை அதிகம் சேர்ப்பதால் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் வெறும் 14 நாட்கள் சுகரை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் உங்கள் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்
வாழ்க்கை முறை வேகமாக மாறி வரும் சூழலில் உணவுப் பழக்கங்களும் மாறி வருகிறது. நாம் நமது உணவுகளில் சுகரை அதிகம் சேர்த்துக் கொள்கிறோம். நான் ஸ்வீட் பெரிதாகச் சாப்பிட மாட்டேன் என நீங்கள் சொல்லலாம்.. சுகர் என்றால் ஸ்வீட் மட்டும் இல்லை.. நீங்கள் தினசரி குடிக்கும் டீ, காபியில் சுகர் சேர்க்கிறீர்கள். பல ஸ்நாக்ஸ், கூல் டிரிங்க்ஸ், கடையில் வாங்கும் பொருட்களிலும் சுகர் இருக்கிறது.

சுகர்
இதுபோல நமது உடலில் செல்லும் சுகர் உடலை பல்வேறு விதங்களிலும் பாதிக்கிறது. இதன் காரணமாகவே உலகின் மிகப் பெரிய போதை (addiction) சுகர் என்கிறார்கள். நீரிழிவு நோயாளிகள் மட்டுமே சுகரை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றில்லை.. அனைத்து தரப்பினரும் சர்க்கரையை தவிர்க்க வேண்டும். அது உடலுக்கு நல்லதையே தரும். சரி ஒரு 2 வாரம் நாம் சுகரை தவிர்க்கிறோம் என்றால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
முதல் 3 நாட்கள்: முதற்கட்ட அறிகுறிகள்
இத்தனை ஆண்டுகள் சுகரை எடுத்துவிட்டு திடீரென அதை விடும்போது முதல் சில நாட்கள் கடினமாகவே இருக்கும். உங்கள் உடல் சர்க்கரை சாப்பிடாமல் இருக்கப் பழக வேண்டும். முதல் சில நாட்களில் தலைவலி, வயிற்று வலி, சோர்வு, எரிச்சல் கூட ஏற்படும். ஆனால், கவலைப்பட வேண்டாம்.. இது சாதாரண விஷயம்தான்.! உங்கள் உடல் சர்க்கரையில் இருந்து விடுபட தொடங்குவதையே இது காட்டுகிறது.
4 முதல் 7 நாட்கள்: ஆற்றல் மேம்படும் & கவனம் அதிகரிக்கும்
4 நாட்களுக்குப் பிறகு உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர தொடங்குவீர்கள்.. உங்கள் உடலில் எனர்ஜி அதிகரிப்பதை உணர்வீர்கள்.. ரத்தத்தில் சுகர் அளவு சீராக இருக்கத் தொடங்குவதால் நீங்கள் அதிக எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பீர்கள்.. உடலில் ஏதோ நல்ல மாற்றம் நடக்கிறது என்பதை உணர்வீர்கள்.
8- 10 நாட்கள்: ஜீரணத்தன்மை அதிகரிக்கும்
சுகர் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் ஒரு வாரத்திற்குப் பிறகு உங்கள் செரிமான அமைப்பு சூப்பராக இயங்கத் தொடங்கும். உங்கள் குடல் நுண்ணுயிர்கள் அதிகரிக்கும்.. இதனால் வீக்கம், மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் பெருவாரியாகக் குறையும்.
11-14 நாட்கள்: தூக்கம் மேம்படும் & பசி குறையும்
இரண்டாவது வாரத்திற்குப் பிறகு, உடல் மொத்தமாக மாறி இருக்கும். அதன் பிறகு சுகரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குத் தோன்றாது. சுகர் என்பது தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கக்கூடியது. உணவில் சர்க்கரை இல்லாமல் போகும்போது தூக்கத்தின் தரம் பல மடங்கு மேம்படும். அதை நீங்களே உணர தொடங்குவீர்கள்.
வெறும் 2 வாரம் சுகரை கட் செய்வதால் உங்கள் உடலில் இத்தனை நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதையே நீங்கள் நீண்ட காலம் தொடரும்போது உங்கள் இதய நோய்ப் பாதிப்பு குறையும். ரத்த அழுத்தம் குறையும், பக்கவாத ஆபத்து குறையும். மேலும், உங்கள் சரும ஆரோக்கியம் அதிகரிக்கும். சர்க்கரையைத் தவிர்க்கும் போது உடலில் சட்டென சுகர் அதிகரிப்பதும் குறைவதும் இருக்காது என்பதால் மூட் ஸ்விங்கையும் கட்டுப்படுத்தலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
இத்தனை ஆண்டுகள் நாம் தொடர்ச்சியாக அதிகப்படியான சுகரை எடுத்து வருவதால் அதை விடும்போது சட்டென தலைவலி, சோர்வு, எரிச்சல் எல்லாம் இருக்கும். ஆனால், ஆரம்ப நாட்களைக் கடந்துவிட்டால் உடலில் ரத்த சர்க்கரை அளவு சீராகும். இன்சுலின் ஸ்பைக்குகள் குறைகின்றன. மேலும், இதனால் நமது உடல் சுகரை விட்டுவிட்டுக் கொழுப்பைப் பயன்படுத்தத் தொடங்கும். இதனால் உடல் எடையும் கூட குறையும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால்.. உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications