மல்லி தண்ணி மருத்துவம்.. கிட்னி கல், சரும நோயை தீர்க்கும் மல்லிகை பூக்கள்.. பெண்களின் வரப்பிரசாதம்
சென்னை: வெறும் வாசனைக்காக கருதப்பட்டு வரும் மல்லிகைப் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ள என்பது ஆச்சரியமான விஷயமாகும்.. அந்தவகையில் எந்தெந்த நோய்களை மல்லிகை பூக்கள் குணமாக்குகின்றன.. மல்லி தண்ணீர் என்றால் என்ன? புற்றுநோய் முதல் குழந்தையின்மை பிரச்சனை வரை சரி செய்யக்கூடிய இந்த மல்லிகை பூவின் மருத்துவத்தை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றக்கூடிய தன்மை மல்லிகை பூக்களுக்கு உண்டு.. வயிற்றுப் புண், வாய்ப்புண்களை சரி செய்யக்கூடிய பண்புகளும் மல்லிகை பூக்களுக்கு உண்டு. மல்லிகைப்பூக்களை நன்றாக விழுதாக அரைத்து உடலில் வீக்கம் மற்றும் எரிச்சல் நமைச்சல் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் எளிதில் குணமடையுமாம்.

மல்லிகை பூ பவுடர்
அதேபோல மல்லிகை பூவை நிழலில் காயவைத்து பவுடராக்கி, எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பவுடரில் வெந்நீரில் கலந்து டீ போல தயாரித்து குடிக்கும்போது, கிட்னியிலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் தணியும்.. இந்த பவுடரை குடித்து வரும்போது எலும்புருக்கி நோய், நுரையீரல் புற்றுநோய்கள் பாதிப்பும் குறையும் என்கிறார்கள்.
மன அழுத்தம் அதிகமாக இருந்தால் பெண்கள் இந்த பூக்களை தலையில் சூடினாலே போதும். தாய்ப்பால் கட்டிக்கொண்டால், தாய்மார்களுக்கு இந்த மல்லிகை பூக்களே மருந்தாகிறது.. மார்பில் கட்டியுள்ள தாய்ப்பாலை வெளியேற்றி, வலியை குறைக்க வேண்டுமானால் மல்லிகை பூவை அரைத்து மார்பகத்தில் பற்றுபோட்டால் போதும்.
தேவாமிர்தம்
முக்கியமாக, மல்லிகைப்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த மல்லிகை தண்ணீர்தான் பலவகையான நோய்களுக்கு மருந்தாகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது தேவாமிர்தம் என்றே சொல்லலாம்.
இந்த தண்ணீர் குடித்து வரும்போது, மாதவிடாய் தொந்தரவுகள் நீங்கும்.. கருப்பைக்கு பலம் உண்டாகி சுகப்பிரசவத்திற்கு வழிவகை செய்கிறது.. அதனால்தான் கருப்பையில் புண்கள், கட்டிகள் நீங்குவதற்கு மல்லிகையில் தயாராகும் எண்ணெய்யை பயன்படுத்துகிறார்கள்.. இந்த எண்ணெய் சருமத்திலுள்ள தழும்புகள், அரிப்புகளையும் சரிசெய்யக்கூடியது.
கண்களில் சதை வளர்ச்சி
மல்லிகை நீரில் பனங்கற்கண்டுடன் சேர்த்து குடித்து வரும்போது, கண்களிலுள்ள சதை வளர்ச்சி குறையும்.. பார்வையும் கூர்மையாகும்... சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் இருப்பவர்கள் இந்த தண்ணீரை குடித்து வரலாம்..
குழந்தையில்லாத தம்பதிகள் மல்லிகை தோட்டத்தில் உலாவினால், அதன் வாசனையே, உடலில் பரவி மாற்றங்களை ஏற்படுத்தி குழந்தை பெறும் வாய்ப்புகளை உண்டுபண்ணும் என்று சொல்வார்கள். அதாவது, காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை இந்த மல்லிகை பூக்களின் தண்ணீருக்கு இருக்கிறதாம்.
வயிற்றுப்புண், வாய்ப்புண்
இந்த மல்லிகை தண்ணீர் உடலிலுள்ள உஷ்ணத்தை போக்குகிறது.. குளிர்ச்சி நிறைந்த இந்த பூக்களின் தண்ணீர் வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை அகற்றுகிறது.. அஜீரண கோளாறுகள் இருந்தால், இந்த தண்ணீரை காலை, மாலை இருவேளை குடித்து வந்தாலே, அஜீரணம் நீங்கிவிடும்.. மலச்சிக்கலும் நீங்குவதுடன், குடல் ஆரோக்கியம் காக்கப்படும். குடற்புழுக்களும் வெளியேறிவிடும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications