கற்பூரவல்லி.. தினமும் 3 இலை போதும்.. பயனுள்ள கற்பூரவல்லி இலை.. சளி, இருமலை ஓட ஓட விரட்டிடும் கஷாயம்
சென்னை: சுவாச கோளாறுகளை முழுமையாக நீக்கும் கற்பூரவல்லி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? சளி, இருமலை போக்கும் கற்பூரவல்லி கஷாயம் எப்படி வைப்பது தெரியுமா?
கற்பூரவல்லி இலைகளில் வைட்டமின் C , A ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கக்கூடிய மூலிகையாக உள்ளது. நம்முடைய உள்ளுறுப்புகள் முதல் சருமம் வரை உடலுக்கு கவசம்போல் பாதுகாக்கிறது.

நுண்கிருமி: சருமத்தில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு ஏற்பட்டால், இந்த கற்பூரவல்லி இலைகளை நன்றாக கசக்கி, அந்த இலைகளின் சாற்றினை பாதிக்கப்பட்ட பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும். இந்த இலையில் தைமால் என்ற வேதிப்பொருட்கள், பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாவை அழிக்கக்கூடிய சக்தி கொண்டது. அதனால்தான், ஏராளமான பற்பசைகளின் தயாரிப்புகள் இந்த இலைகளையும் மூலப்பொருட்களாக சேர்க்கிறார்கள்.
செரிமானம் தொந்தரவால் அவதிப்படுபவர்கள், கற்பூரவல்லி சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.. இந்த இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்று போல போட்டாலே தலைவலி பறந்துவிடும்.
கற்பூரவல்லி இலைகள்: நுரையீரலுக்கு கவசமாக திகழ்கிறது கற்பூரவல்லி இலைகள். சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டடை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற சுவாச கோளாறுகளை போக்க இந்த இலைகள் பயன்படுகின்றன.
நெஞ்சில் சளி, கபம் கட்டிவிட்டால், இந்த கற்பூரவல்லியின் ஒரே ஒரு சிற்றிலை மட்டும் எடுத்து, அதை நெருப்பில் வாட்டி, கையால் கசக்கி சாறு எடுத்து வடிகட்டி சங்கில் ஊற்றி கைக்குழந்தைகளுக்கு தருவார்கள். பெரியவர்களுக்கு சளி, இருமல் பிரச்சனை நீங்க வேண்டுமானால், 3, 4 கற்பூரவல்லி இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
கிராம்பு: அல்லது இந்த இலைகளை விழுதுபோல அரைத்து, அதை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிக்கொண்ட, சிறிது ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் சளி, தலைபாரம் தொந்தரவு நீங்கிவிடும். இந்த கற்பூரவல்லி இலைகளை, கையாலேயே கசக்கி, தண்ணீரில் போட்டு ஆவி பிடிப்பதால், தலைபாரம், நீர்க்கோப்புக்கு தீர்வு ஏற்படும்.
வெறும் கற்பூரவல்லி இலையை கசக்கி அதன் சாற்றின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்சினாலும், மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். இதனால், நுரையீரல் பாதை தொடர்பான தொற்றுகளும் விலகிவிடும்.
தொண்டை கரகரப்பு: கற்பூரவல்லி இலைகளுடன் ஏலம், கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து கஷாயமாக்கி, அதில் தேன் சேர்த்து குடிக்கலாம்.. தொண்டை கரகரக்கும்போதே, சிறிது இலையை மென்று சாப்பிட்டுவிட வேண்டும். இதனால், தொண்டையில் கட்டிய கபம் உடனே இளகிவிடும்.
கால்சியம் ,பொட்டாசியம் மெக்னீசிய சத்துக்கள் அடங்கியிருக்கும் இந்த கற்பூரவல்லி இலைகளை வைத்து, வேறுவகையிலும் சளி, இருமலுக்கு கஷாயம் செய்து குடிக்கலாம். அதாவது, கற்பூரவல்லி இலைகளை, சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி திப்பிலி மற்றும் மிளகு இந்த இரண்டையும் கரகரப்பாக தூள் செய்து கொள்ள வேண்டும்.
கஷாயம்: இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கற்பூரவல்லி இலைகள், இடித்து வைத்திருக்கும் அரிசித்திப்பிலி, மிளகு, மற்றும் கருஞ்சீரகத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்... இறுதியில் வடிகட்டி அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தொண்டையில் படுமாறு இதை குடித்து வந்தாலே, சளி, இருமல், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவுகள், தொண்டைக்கட்டு, அஜீரணம் போன்ற அனைத்து சுவாச கோளாறுகளும் நீங்கும்..!!!
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications