தாம்பூலம் வெற்றி.. சித்த மருத்துவம் சொல்லும் சிறந்த மருந்து.. வெற்றிலையை ஆண்கள் இப்படி சாப்பிடணுமாம்
சென்னை: தமிழ் கலாசாரத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வரும் "தாம்பூலம்" பற்றி தெரியுமா? இந்த தாம்பூலம் தரும் நன்மைகள் என்னென்ன? எந்தெந்த உடல்நல கோளாறுகளை இந்த தாம்பூலம் சரிசெய்கின்றன? எப்படி சாப்பிட வேண்டும்? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நம்முடைய தமிழ் கலாசாரத்தில் "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு போடுவது தொன்று தொட்டே நிலவி வருகிறது.. தாம்பூலம் எப்படி சாப்பிட வேண்டும் என்பது சித்த மருத்துவத்திலும் சொல்லப்பட்டுள்ளது..

தாம்பூலம்: அதாவது, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டுமாம்.. மூன்றாவதாய் ஊறும் நீர் அமிர்தம் என்றும் கூறுகிறது சித்த மருத்துவம். தாம்பூலம் போடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்புகள் உறுதி பெறும், வாய் நாற்றம் போகும், மலச்சிக்கல் நீங்கும் என்பதால், இதை தவறவிடக்கூடாது.
அந்தவகையில், தமிழர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களிலும் இடம்பெறுவது வெற்றிலை, பாக்குதான். வெற்றிலையை பொறுத்தவரை, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, நிகோடினிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன.
தாய்ப்பால்: வெற்றிலைகள் உடலுக்கு வெப்பம் தரக்கூடியது.. தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்க உதவுகிறது.. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் என முக்கிய உறுப்புகளின் உறுதிக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.. நரம்பு மண்டலத்துக்கு பலம் தருவதால், வளரும் பிள்ளைகளுக்கு இந்த வெற்றிலை சாறு தருவார்கள்.. இதனால், அவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
குறைவான கொழுப்பு, மிதமான புரதம் உள்ளதால், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் வெற்றிலை பயன்படுத்தலாம். இளம் கொழுந்து வெற்றிலையுடன் ஐந்தாறு மிளகு சேர்த்து, வாயில் போட்டு மென்று தின்றால் உடல் எடை மெல்ல குறைய துவங்கும்.. வெறும் வயிற்றில் 8 வாரங்களுக்கு இப்படி செய்வதால், குடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளும் நீங்கும்.
சளி தொல்லை: குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால், ஒரே ஒரு வெற்றிலையில் நான்கைந்து துளசி இலைகளை வைத்து கசக்கி பிழிந்து அந்த சாற்றினை தரலாம்.. உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள், காயங்களுக்கு மருந்தாகக்கூடியவை.. மலச்சிக்கல் இருந்தால் தாம்பூலத்துடன், கொஞ்சம் பாக்கை அதிகம் சேர்க்க வேண்டும். வாய் நாற்றம் உள்ளவர்கள் கிராம்பு, ஏலக்காய் பயன்படுத்த வேண்டும்.
வெற்றிலைகளை அளவோடு சாப்பிட்டுவந்தால் ஆண்மை குறைபாடும் நீங்கும். வெற்றிலையை வெறுமனே சாப்பிட்டாலே, வயாகராவுக்கு இணையான சக்தி கிடைக்குமாம். ஆண்களின் வீரிய சக்தி அதிகரிக்க இரவில் தாம்பூலத்துடன் சாதிக்காய் சேர்க்க வேண்டும். சுண்ணாம்பு இருப்பதால் எலும்புகள் உறுதியடையும்.
வெற்றிலைகள்: வெற்றிலைகளை இடித்து, வெறும் சாற்றில் தேன் கலந்து சாப்பிடும்போது, விறைப்பு பிரச்சனை நீங்குகின்றன. வெற்றிலையில், துளசி வேர்ப்பொடி சிறிது சேர்த்து சாப்பிடுவதால் ஆண்மை பெருக செய்கிறதாம்.. எனினும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே இதை மருந்தாக எடுத்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications