கானாங்கெளுத்தி மீன்.. அயிலை.. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் மீன்களை சாப்பிட கூடாதா? கருவாடு? அலர்ட்
சென்னை: உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் உலர்மீன்கள் எனப்படும் கருவாடுகளை சாப்பிடலாமா? ஹைபர் டென்ஷன் பிரச்சனை இருப்பவர்கள் என்னென்ன மீன்களை சாப்பிடலாம்?
அதிக உடல் எடை, அதிக கொழுப்பு, அதிக மன அழுத்தம், அதிக கார்போஹைட்ரேட், அதிக உடலுழைப்பின்மை போன்றவை அனைத்துமே, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்குன்றன.. சிகரெட், மதுவை தவிர்ப்பதுடன், உணவு முறையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்..

கீரை வகைகள்: கீரைவகைளில் அனைத்துமே நல்லது என்றாலும், செலரி எனப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துணைபுரியும் என்கிறார்கள். அத்துடன், உடல் எடையை குறைக்கவும் இந்த கீரை உதவுகிறது..
சமையலில் எப்போதுமே நிறைய பூண்டு, நிறைய இஞ்சியை சேர்த்து கொள்வது நல்லது.. ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் குறைக்கும் தன்மை கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். பழச்சாறுகள், கோதுமை புல் சாறு இதெல்லாம்கூட உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது..
வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை மீன் சாப்பிடுவது உயர்ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. ஒமேகா 3 உட்பட புரோட்டீன் அதிகம் உள்ள மீன்களில் அயிலை மீன்கள் தவிர்க்க முடியாதவை. இதயநோய், மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவதுடன், கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது..
அயிலை மீன்கள்: வைட்டமின்கள் B5, B6 பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம், நல்ல கொழுப்புகள், புரதச்சத்து இதில் உள்ளன.. கார்போஹைட்ரேட் இல்லாததால், உடல் எடையை குறைக்க இது மிகச்சிறந்த உணவாக இந்த அயிலை கருதப்படுகிறது. பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும். சர்க்கரை நோய் பாதிப்பு வருவதை தடுக்கலாம்.. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இந்த மீனின் ஒவ்வொரு 3-அவுன்சிலும் 20.2 கிராம் புரதம் இருப்பதால்தான், அயிலைக்கு எப்போதுமே டிமாண்டு இருக்கிறது.. அதனால்தான், தமிழகத்தில் இந்த மீன் பிடிக்கப்பட்டாலும், கேரளாவுக்கு அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதியாகி கொண்டிருக்கிறதாம்..
அயிரை மீன்களில் கெட்ட கொழுப்பு குறைவாகவும், நல்ல கொழுப்பு அதிகமாகவும் உள்ளது. எனவே, ரத்த நாளங்களின் செயல்பாட்டுக்கு துணைபுரிவதுடன், ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கவும் செய்கிறது.. உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், அயிரை மீனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வரலாம். அதேபோல, சர்க்கரை நோயாளிகள் இந்த மீனை சாப்பிடுவதால், அபாயம் குறைகிறதாம்..
கருவாடுகள்: ஆனால், கருவாடுகளை தவிர்த்துவிட வேண்டும்.. ரத்த நாளங்களை சேதமடைய வைத்து ஹைபர் டென்ஷனுக்கு வழிவகுப்பதாக பிரிட்டன் ஆய்வு ஒன்று கூறுகிறது..
பொதுவாக, காய்ந்த மீன்களில் அதிக புரதங்களும், குறைந்த கொழுப்புகளும் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் உலர் மீன்களிலுள்ள உப்பு, இதய ஆரோக்கியத்தை கெடுக்கிறதாம். அதேபோல, இதிலுள்ள சோடியமும் நிறைந்துள்ளன.. எனவே, ஏற்கனவே உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் கருவாடு சாப்பிடும்போது, பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.
கானாங்கெளுத்தி: பொதுவாக நம்முடைய உணவில் ஒருநாளில் அதிகபட்சமாக 6 கிராம்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்... சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்றவை மூளை மற்றும் இதயத்தை பாதுகாக்கும் உணவுகளாகும். எனவே, ரத்த நாளங்களை பாதிக்கக்கூடிய உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். அப்படியே மீன் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications