வெறும் 21 வயசுதான்.. நண்பன் திருமணத்தில் குத்தாட்டம்.. பரிதாப இளைஞர்.. டாக்டர்கள் வார்னிங்கை பாருங்க
சென்னை: நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மது அருந்திவிட்டு நடனமாடிய 21 வயது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞர் மணி பிரசாத். இவரது நண்பருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். மணி பிரசாத்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு நடனம் ஆட வேண்டும் என்று தோன்றியுள்ளது.

இதனையடுத்து சக நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அதே இடத்தில் சுருண்டு விழுந்திருக்கிறார். உடனே பயந்து போன சக நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசாத் நடனமாடுவதற்கு முன்னர் நன்றாக குடித்திருந்திருக்கிறார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது போன்ற திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்களை மருத்துவர்கள் கார்டியாக் அரெஸ்ட் என்று சொல்கிறார்கள். திடீரென மேற்கொள்ளப்படும் கடினமான செயல்பாடுகளின் போது இதயமும், ரத்த குழாய்களும் விரிவடைகின்றன. இது ஒரு கட்டத்தை தாண்டும் போது இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. முதன்மையான காரணங்கள் மரபணு சார்ந்த குறைபாடுதான். குடும்பத்தில் இதற்கு முன்னர் யாருக்கேனும் இதுபோன்ற இதய பாதிப்பு வந்திருக்கிறது எனில், அது குடும்பத்தில் சந்ததியினருக்கும் தொடர வாய்ப்பிருக்கிறது. மட்டுமல்லாது மது, புகையிலை என போதைப்பொருட்களின் பயன்பாடும் இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக மருத்துவமனைக்கு வெளியே இதுபோன்று மாரடைப்பு ஏற்பட்டால், அதில் வெறும் 3-8 சதவிகிதத்தினர் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர். இப்படி இருக்கும் போது மாரடைப்பு குறித்து கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்படி மாரடைப்பு ஏற்படுமாயின் அதற்கான சில அறிகுறிகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
அதாவது, வயிற்று பிடிப்பு, மார்பில் அழுத்த உணர்வு, தொண்டையில் ஏதேனும் சிக்கியுள்ளதை போன்ற உணர்வு, வழக்கத்திற்கு மாறான சோர்வு, அதீத வியர்வை, இதயத்திலிருந்து கழுத்து, பல், முதுகு தண்டு வரை வலி பரவுவது, அதேபோல இதயத்திலிருந்து இடது கை முழுக்க வலிப்பது போன்றவை இதற்கான அறிகுறியாகும். ஆனால் பலரும் இதை சாதாரண கேஸ் பிரச்னை என்று நினைத்துவிடுகிறார்கள். எனவேதான் அவர்கள் உடனடியாக மருத்துவமனையை நாடுவதில்லை.
இதுவே பெரும்பாலானோரின் மரணத்திற்கு காரணமாகிவிடுகிறது. எனவே, இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகுங்கள். அதேபோல இதனை வரும் முன் காப்பதற்கு முயற்சிப்பது சிறந்தது. அதாவது, வெண்ணெய், பன்னீர், பாலாடைக்கட்டி, நெய் மற்றும் சிவப்பு இறைச்சிக்கு பதிலாக தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி, மீன் இறைச்சி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்துக்கள் அதிகம் இருக்கிறது. அதேபோல பருப்பு மற்றும் கொட்டை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றையும் விட முக்கியமானது மன நலன்தான். எனவே பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications