மத்திய அரசு அலுவலகங்களில் தமிழருக்கு முன்னுரிமை..லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம்- ஆளுநர் உரை முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; லோக் ஆயுக்தா அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகள் தமிழக சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் இன்று ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையின் முழு விவரம்:
மாநில உரிமைகள்
- திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது தமிழக அரசு.
- எந்த பாரபட்சமும் இன்றி, அனைவருக்குமான அரசாக செயல்படும்
- மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகள்
- மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்ட நடவடிக்கை
- உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவோம்
- மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்
- மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு கடுமையாக எதிர்க்கும்.
- 'உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்'
- ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும்
- தமிழ்நாடு அரசிற்குத் தேவைப்படும் உதவிகளை ஒன்றிய அரசு செய்யும் என நம்புகிறோம்.

கொரோனா தடுப்பூசி
- தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்த சூழ்நிலை அறவே மாறியுள்ளது
- தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது
- ஒன்றிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
- தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதியுதவி குவிந்துள்ளது
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் 141.10 கோடி ரூபாய் உடனடியாக பயன்படுத்தப்பட்டது
- திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபா ஒதுக்கீடு
- 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணத் தொகை
தமிழ் வளர்ச்சி
- பொதுமக்களுக்கு இரண்டு தவணைகளாக மொத்தம் 8,393 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது
= 466 ரூபாய் மதிப்பிலான 14 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது
- அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக ஐந்து கிலோ அரிசி
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக மொத்தம் 10,068 கோடி ரூபாய் வழங்கி உள்ளது
கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள நடவடிக்கை
- கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்
- சென்னை கிங் மருத்துவமனை வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை
- அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் சேமிப்பும் உற்பத்தித் திறனும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
- திரவ மருத்துவ ஆக்சிஜனையும், அது தொடர்புடைய கருவிகளையும் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவ நடவடிக்கை
- தேசிய அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைவருக்கும் இலவசமாக வழங்கும் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசுக்கு நன்றி
தமிழ் வளர்ச்சி
- தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வலியுறுத்துவோம்
- தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழி இணை-அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட அரசியல் சாசன திருத்தம்
- சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்.
ஈழத் தமிழர் நலன்
- ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார், அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும்.
- இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும் வற்புறுத்தும்.
சட்டம் ஒழுங்கு
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிக்கும்.
- சாதிமதப் பிரச்சினைகள் இல்லாத அமைதியான, இணக்கமான சமூகச் சூழல் இன்றியமையாதது.
- அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் இந்த அரசு உறுதிப்படுத்தும் .
- காவல்துறையினருக்கும், மக்களுக்கும் இடையிலான நல்லுறவே, காவல்பணியின் இன்றியமையாத குறிக்கோள்
- காவல்துறைப் பணியாளர்களின் குறைதீர்க்கும் செயல்முறைகள் வலுப்படுத்தப்படும்.
- பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கான நியமனங்கள் விரைவுபடுத்தப்படும்.
- அனைத்து வழக்குகளுக்கும் விரைவாக தீர்வு காண நடவடிக்கை
- பரிவுள்ள ஆளுமை என்பது அரசின் முக்கியக் கோட்பாடாகும்.
- 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
- அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் குடிமக்களுக்கு முழுமையாகப் பலனளிப்பதை அரசு உறுதி செய்யும்.
- மின் ஆளுகையை ஊக்குவித்து இணையவழி மூலம் அரசு சேவைகளைப் பெறுவதற்கான வழிகளை உயர்த்த நடவடிக்கை
- இயற்கைப் பேரிடர் செய்திகளையும் எச்சரிக்கைத் தகவல்களையும் சரியான நேரத்தில் தெரிவிக்க புதிய தொழில்நுட்ப சேவைகள்
- தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமை ஆகும்.
- மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதான புகார்களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புத்துயிர்; உரிய அதிகாரம்
- நிலுவையிலுள்ள ஊழல் புகார்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும்.
பொருளாதார ஆலோசனை குழு
- 'முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு' ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
- அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன்
ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன்
பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ்
முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண்
ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன்சுமையை குறைக்கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் அரசு கவனம் செலுத்தும்.
- தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஜூலையில் வெளியிடப்படும்.
விவசாயிகள் நலன்
- விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில், வேளாண்மைத் துறை, 'வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை' என பெயர் மாற்றம்
- ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
- உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.
- அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும்.
- வாகனங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே காய்கறிகளும் பழங்களும் விற்பனை திட்டம் விரிவுபடுத்தப்படும்
- 2021-22 ஆம் ஆண்டில், 125 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு
- போர்க்கால அடிப்படையில் 4,061 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள்
நீர்வளம், நதிநீர் பிரச்சனை
- நீர்வளங்களுக்கென ஒரு தனி அமைச்சகம் இந்த அரசால்
- நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும்.
- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை
- கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
- முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்க கேட்டுக்கொள்ளும்.
- காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் விரைவாகச் செயல்படுத்திட அரசு உறுதிபூண்டுள்ளது.
- அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட அரசு உறுதியாக உள்ளது.
- பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ் ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை
மீனவர் நலன்
- கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்படும்
- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை
- கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக தேசிய ஆணையத்தை அமைக்க கோரிக்கை
பொதுவிநியோகம்
- ஆவின் பால் விற்பனை விலை குறைப்பால் தினசரி பால் விற்பனை 1.5 இலட்சம் லிட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
- ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும்.
- குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால் பதினைந்து நாட்களுக்குள் 'ஸ்மார்ட் கார்ட்' வழங்கப்படும்.
- பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களின் கொள்முதல் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
- நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை
- அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும்
- கலைஞர் பெயரில் 70 கோடி ரூபாய் செலவில் மதுரையில் சர்வதேசத் தரத்திலான நவீன பொது நூலகம்
- மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படும்.
தொழில் துறை
- கோவிட் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை விரைவாக மீட்டெடுக்க நடவடிக்கைகள்
- தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்பட வேண்டிய தொழில் வரியை செலுத்துவதற்கான கால அளவும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு
- தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் குழு பரிந்துரைகள் நிறைவேற்றம்
- சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும் சென்னைபெங்களூரு தொழில் பெருவழியிலும் தொழில் நிறுவனங்களைத் தொடங்க நடவடிக்கை
- மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம்
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் நிதிநிலை குறித்து விரிவான ஆய்வு
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை
அடிப்படை கட்டமைப்பு- சுற்றுலா
- கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள்
- ஏழை எளியோருக்கான வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக நடவடிக்கை
- அனைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்கப்படும்.
- புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
- சென்னையில் மாநகரக் கட்டமைப்பை நவீன சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில், 'சிங்காரச் சென்னை 2.0' எனும் புதிய திட்டம்
- 'சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு' அமைக்கப்படும்.
- நெடுஞ்சாலைக் கட்டமைப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை
- சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை அரசு உறுதி செய்யும்.
- மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து அமைப்புகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
- பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் அனைத்து சாதாரண நகரப் பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணம்
- சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும்.
- பழங்காலக் கோட்டைகளும் அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரியச் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.
அறநிலையத்துறை
- கோயில்களின் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புடைமையையும் முன்னிறுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.
- அனைத்து முக்கிய இந்துக் கோயில் மேம்பாடுகளுக்கு ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்.
- பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டந்தோறும் நிறுவப்படும்.
- மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்.
தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை
- தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை
- தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை
- தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
- ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான அளவுகோல்களை நீக்கவும், தற்போதைய வரம்பினை 8 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தவும் கோருதல்ல்
- அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்களின் மூலம் நிரப்பப்படும்.
- பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்படும்.
- தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழல் உருவாக்கித் தரப்படும்.
சிறுபான்மையினர், திருநங்கைகள்
- கல்வி முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு மற்றும் வீட்டுவசதிகளை சிறுபான்மையினர் பெற சச்சார் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையில் நடவடிக்கை
- வக்ஃபு வாரியத்தின் நிலங்கள் பாதுகாக்கப்படும்.
- திருநங்கைகளின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த, வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
- சர்வதேசப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்ல பயணச் செலவுகள் வழங்கப்படும்.
- அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களின் பணி நியமனம் திறம்பட செயல்படுத்தப்படும்.
- அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனை அரசு தொடர்ந்து பாதுகாக்கும்.
சமூக நீதி அரசு
- 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற மாபெரும் சமூகநீதித் தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இயங்கும்.
- ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும்.
- தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு அரசு உறுதியேற்றுள்ளது.
- அனைத்து மாநிலங்களும் தலைநிமிர்ந்து நோக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம்.
- இந்தியாவின் ஈடு இணையற்ற மாநிலம் இன்பத் தமிழ்நாடுதான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications