என் கனவை விட்டுக் கொடுத்து உங்கள் கனவுகளை நனவாக்குவேன்: இது ராகுல் காந்தி...

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி உதய்பூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் பேசியதாவது:
நீங்கள் எங்களை விமர்சித்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. நாங்கள் காங்கிரஸ் படைவீரர்கள். இந்த நாட்டுக்காக சேவையாற்றுகிறவர்கள்.
இந்தியாவின் ஏழை எளிய மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர். இதனாலேயே எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சியினர் மீது ஆத்திரத்தில் இருக்கின்றனர்.
என்னுடைய கனவுகளை நான் விட்டுக் கொடுத்து உங்களது கனவுகளை நனவாக்க விரும்புகிறேன். விமான நிலையம், உள்கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கியிருக்கிறோம் என்று சிலர் பேசுகின்றனர். இதனால் இந்த நாடு மகிழ்ச்சி அடைகிறது.
ஆனால் இந்த நாடு முன்னேற்றத்தை அடையாத வரையில் அந்த சாலையும் விமான நிலையங்களும் போடுகிறவர்களுக்கு நாள்தோறும் உணவு கிடைக்காது. காங்கிரஸ் அரசின் உணவு உத்தரவாத சட்டத்தால் இந்த நாட்டில் எவருமே பசியோடு இருக்கப் போவதில்லை.
இந்தியா என்பது பல மலர்களைக் கொண்ட தேசம். இந்த நாட்டில் ஹிந்து, இஸ்லாமியர்கள் அல்லது ஆதிவாசிகள் என அனைத்து தரப்பினருமே ஒளிர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எதிர்க்கட்சியினரோ அனைத்து சிறுபான்மையினரையுமே மறக்க விரும்புகின்றனர்.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் எந்த அரசும் தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலத்தை கட்டாயமாக பறித்துவிட முடியாது. ஒடிஷாவின் நியாம்கிரியில் அந்த மலையை பழங்குடி இன மக்கள் தெய்வமாக மதிக்கின்றனர். ஆனால் பாஜகவினரும் பிஜூ ஜனதா தளத்தினரும் அதை பறித்துக் கொடுக்க முயற்சிக்கின்றனர்.
காங்கிரஸ் அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவாது ஏழை மக்களின் நிலத்தை எவரும் கட்டாயமாக பறித்துவிடக் கூடாது என்பதற்காகவே;.
இவ்வாறு அவர் பேசினார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!











Click it and Unblock the Notifications