பிரதமர் வேட்பாளராக மோடி! ஏற்க மறுத்து அடம் பிடிக்கும் அத்வானி! ஆதரவுக்காக போராடும் ராஜ்நாத்!!
டெல்லி: குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தொடர்ந்தும் மறுத்து பிடிவாதம் காட்டி வருகிறார். இதனால் நரேந்திர மோடி பிரதமராக அறிவிப்பது ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்கியே தீருவது என்பதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. பந்தை தமது எல்லைக் கோட்டிலிருந்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் பக்கம் தட்டிவிட்டிருக்கிறது அந்த இயக்கம்.

இதனால் விரைவில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் ராஜ்நாத் சிங் இருக்கிறார். இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் மோடியை எதிர்க்கும் அத்வானியை இன்று பகலில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் ராஜ்நாத்சிங்.
அத்வானியை சமாதானப்படுத்திவிட்டால் சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷியையும் சமாதனப்படுத்திவிடலாம் என்பது ராஜ்நாத்தின் கணக்கு. இவர்களைப் பொறுத்தவரையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு மோடியை அறிவிப்பது பற்றி முடிவெடுக்கலாம் என்பதுதான் கருத்து. ஆனால் ஆர்.எஸ்.எஸ். இதனை ஏற்கவில்லை.
இன்றைய சந்திப்பின் போதும் அத்வானி இதனையே வலியுறுத்தியிருக்கிறார். இதனால் ராஜ்நாத்சிங் மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து மோடிக்காக ஆதரவு திரட்டும் படலத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் வெற்றி பெறும் நிலையில் நாளை மறுநாள் நரேந்திர மோடியை அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடும்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications