டெல்லி சட்டசபை தேர்தல்: தொங்கு சட்டமன்றம் உருவாகும்- கருத்துக் கணிப்பு
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று ஏபிபி நியூஸ் நீல்சன் மூட் ஆப் தி நேஷன் சர்வே தெரிவித்துள்ளது.
பாஜகவுக்கு மொத்தம் உள்ள 70 இடங்களில் 32 இடங்கள் கிடைக்கும் என்றும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் கிடைக்கலாம் என்றும் இது கணித்துள்ளது.
ஆகஸ்ட்14 முதல் 20 வரை இந்த சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 7084 பேரிடம் கருத்து கேட்டு பெற்றனர். 1998 முதல் டெல்லியை காங்கிரஸ் ஆண்டு வரும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலம் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

இளம் வாக்காளர்கள்
இளம் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸுக்கு செல்வாக்கு இல்லை என்றும் சர்வேயில் தெரிய வந்துள்ளது. 18 முதல் 23 வயதுடைய வாக்காளர்களில் 42 சதவீதம் பேர் காங்கிரஸ் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஷீலா தீட்சித் மோசம்
முதல்வர் ஷீலா தீட்சித்துக்கும் மக்கள் மத்தியில் மிகவும் மோசமான பெயர் கிடைத்துள்ளது. சராசரிக்கும் கீழான முதல்வர் என்று தீட்சித் கருதப்படுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசம் என்ற நிலையிலிருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு அவர் போய் விட்டார் என்று கூறியுள்ளனர்.
முக்கியப் பிரச்சினைகளில் டெல்லி காங்கிரஸ் அரசும், முதல்வர் தீட்சித்தும் மிகவும் மோசமாக செயல்பட்டுள்ளாக அவர்கள் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 45சதவீதம் பேர் தீட்சித் மிகவும் மோசமான முதல்வர் என்று கூறியுள்ளனர்.

பாஜக அதிரடி
மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜகவிற்கு 32 இடங்கள் கிடைக்கும் என்றும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் கிடைக்கலாம் என்றும் இது கணித்துள்ளது.

ஆம் ஆத்மி அதிரடி
டெல்லி சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் பாதிக்கும் என்றும் கணிப்பு கூறுகிறது. இந்தக் கட்சிக்கு 8 சீட்கள் வரை கிடைக்கலாமாம். அதேசமயம், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 சீட்கள் கிடைக்கலாமாம்.

தனி மெஜாரிட்டி
ஆம் ஆத்மி கட்சி மட்டும் இல்லாவிட்டால், பாஜக 15 சதவீத கூடுதல் ஓட்டுக்களைப் பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றும் இந்த சர்வே தெரிவிக்கிறது.

ஊழலை ஒழிக்கும்
ஊழல், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைதான் இந்த தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக இருக்குமாம்.
ஆம் ஆத்மி கட்சி ஊழலை ஒழிக்கும் என்று நிறையப் பேர் நம்புகிறார்களாம். இதே காரணத்திற்காக ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கவுள்ளதாக முறையே 26 மற்றும் 25 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

ஏன் பாஜக?
பணவீக்கத்தை காங்கிரஸ் கட்டுப்படுத்த்த தவறி விட்டதால் பாஜகவுக்கு வாக்களிப்பதாக 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஊழலை ஒழிக்கத் தவறியதால் பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதாக 28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவால்தான் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் டெல்லி மக்கள் நம்புகிறார்களாம்.

பாஜகவினர் கூட
அதேசமயம், பாஜகவிலிருந்து ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கப் போவதாக 28 சதவீதம் பேர் கூறியிருப்பது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

விஜய் கோயல்
26 சதவீதம் பேர் பாஜகவின் விஜய் கோயல் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று தெரிவித்துள்ளனர். கேஜ்ரிவாலுக்கு 24 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. தீட்சித்துக்கு 22 சதவீத ஆதரவு உள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications