ஈரான்: நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தப் பேருந்துகள்: 44 பேர் பலி, 39 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

44 killed, 39 injured in Iran bus collision
டெஹ்ரான்: ஈரானில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 44 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள். படுகாயமடைந்த 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றிரவு, 11 மணியளாவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, ஈரான் - கோம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாரா விதமாக அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, அதன் முன்னே சென்றுகொண்டிருந்த காரின் மீதும், அதனைத் தொடர்ந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீதும் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.

பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்து, அதில் பயணம் செய்த பயணிகள் சுதாரிப்பதற்கு முன் தீ மளமளவெனப் பரவியது.இதில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் 44 பேர் பரிதாபமாக பலியாயினர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் மேற்கொண்ட முயற்சியில் படுகாயமடைந்த 39 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+