தமிழ்நாடு காவல்துறையில் 1,299 எஸ்.ஐ காலிப்பணியிடங்கள்.. TNUSRB அறிவிப்பு.. இளைஞர்களே ரெடியா
சென்னை: தமிழக காவல்துறையில், காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,299 எஸ் ஐ பணியிடங்களை நிரப்ப TNUSRB அறிவிப்பு ஆணை வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 7 ஆம் தேதி முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன தகுதிகள் என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழக காவல்துறையில் வேலை பார்க்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கும். கல்லூரி படிப்பதில் இருந்தே இதற்காக இளைஞர்கள் தயாராகி வருகிறார்கள். டிஎன்யூஎஸ் ஆர்பி எனப்படும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் இதற்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. கான்ஸ்டபிள், எஸ் ஐ என பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அந்த வகையில் இளைஞர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த எஸ் ஐ பணியிடங்களை நிரப்ப, TNUSRB எனப்படும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஆணை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான எஸ் ஐ காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 காவல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* காவல் துணை ஆய்வாளர் (தாலுக்) - 933 பணியிடங்கள்
(ஆண்கள் 654, பெண்கள் - 279)
* காவல் துணை ஆய்வாளர் (ஏஆர்) - 366 பணியிடங்கள்
(ஆண்கள் 255, பெண்கள் - 111) என மொத்தம் 1,299 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்திருந்தால் போதும். 10+2+3/4/5 என்றவாறோ அல்லது 12 ஆம் வகுப்புக்கு பதில் டிப்ளமோ படித்திருந்தால் 10+3+2/3 என்ற முறைப்படியோ டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2025 அன்று தேதிப்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தது 20 வயதும் அதிகபட்சம் 30 வயதுக்கும் உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
வயது வரம்பு தளர்வு
* அதாவது, ஓபிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி என்றால் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் திருநங்கைகள் என்றால் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
* ஆதரவற்ற விதவை என்றால் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
* முன்னாள் ராணுவ வீரர்கள் / மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) முன்னாள் பணியாளர்கள் என்றால் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
* துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு
* காவல் துணை ஆய்வாளர் (தாலுக்) - ரூ. 36,900 - 1,16,600 ரூபாய் வரை
* காவல் துணை ஆய்வாளர் (ஏஆர்) - ரூ. 36,900 - 1,16,600 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
* முதலில் எழுத்து தேர்வு (தமிழ் மொழி பாட தகுதி தேர்வு)
* முதன்மை எழுத்து தேர்வு
* உடல் அளவீட்டுத் தேர்வு
* எண்டரன்ஸ் தேர்வு
* உடல் திறன் தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு
* Viva-Voce மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் :
* ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
* டிப்பார்மெண்டல் துறை ரீதியான விண்ணப்பதாரர்கள் ரூ.1000 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்யூஎஸ்ஆர்பியின் அதிகாரப்பூர்வமான இணையதளமான https://tnusrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
வரும் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 3.05.2025 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அப்டேட் செய்யப்படும்.
-
IT JOBS: 2026ல் படிப்பை முடித்தோருக்கு ஜாக்பாட்.. அலோவன்ஸ் + சம்பளத்துடன் வேலை தரும் Cognizant -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் கவலை வேண்டாம்.. HCL தரும் வேலை.. ஏப்ரல் 10ம் தேதி இண்டர்வியூ -
இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. 350 பணியிடங்கள்.. பிஇ முடித்தவங்களுக்கு ஜாக்பாட் -
இந்திய நர்ஸை.. ஆண்ட்டி என்று அழைத்த நபர்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்?












Click it and Unblock the Notifications