ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு.. 1376 பணியிடங்கள்! 44,000 சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: ரயில்வேயில் 1,376 பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ஆர்ஆர்பி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், இதற்கான கல்வித்தகுதி என்ன?, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகளை வெளியிட்டு பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்வேயில் 1,376 பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கு பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
1. உணவியல் நிபுணர் - 05 பணியிடங்கள்
2. நர்சிங் கண்காணிப்பாளர் - 713
3. ஆடியாலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் - 04
4. கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் - 07
5. பல் மருத்துவர்- 03
6. டயாலிசிஸ் டெக்னீஷியன் - 20
7. ஹெல்த் & மலேரியா இன்ஸ்பெக்டர் - 126
8. ஆய்வக கண்காணிப்பாளர் - 27
9. பெர்ப்யூஷனிஸ்ட் - 02
10. பிசியோதெரபிஸ்ட் - 20
11. ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் - 02
12. கேத் லேப் டெக்னீஷியன் - 02
13. பார்மசிஸ்ட் - 246
14. ரேடியோகிராபர் எக்ஸ்-ரே டெக்னீஷியன் - 64
15. ஸ்பீச் தெரபிஸ்ட் - 01 பதவி
16. கார்டியாக் டெக்னீசியன் - 04
17. ஆப்டோமெட்ரிஸ்ட் - 04
18. இசிஜிடெக்னீசியன் - 13
19. ஆய்வக உதவியாளர் 94
20. களப்பணியாளர் - 19 என மொத்தம் 1,376 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: பணியின் தன்மைகேற்ப கல்வி தகுதி மாறுபடும். வேலைக்கு தகுந்தபடி துறை ரீதியிலான படிப்புகள் முடித்து இருப்பது அவசியம். அதாவது நர்சிங் பணியிடங்களுக்கு பிஎஸ்சி செவிலியர் பட்டம் பெற்று இருக்க வேண்டும். உணவியல் நிபுணர் பணிக்கு பிஎஸ்சி (அறிவியல் பட்டம்) மற்றும் உணவியல் தூறையில் ஒரு வருட டிப்ளமோ படித்து இருக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று இருக்க வேண்டும். அல்லது பிஎஸ்சி ஹோம் சயின்ஸ் + எம்எஸ்சி ஹோம் சயின்ஸ் (உணவு மற்றும் ஊட்டச்சத்து) பட்டம் பெற்று இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: நர்சிங் கண்காணிப்பாளர், பெர்ப்யூஷனிஸ்ட் பணிக்கு வயது உச்ச வரம்பு 43 ஆகும். பார்மாசிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 - 38 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். ஆடியோலாஜிஸ்ட் & ஸ்பீச் தெர்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 - 33 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். களப்பணியாளர் பணிக்கு 18 - 33 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு வயது உச்ச வரம்பு 36 ஆகும். எனினும் அரசு விதிகளின் படி அனைத்து பணியிடங்களுக்கும் வயது உச்சவரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: பணியிடங்களுக்கு தகுந்தபடி சம்பளம் மாறுபடும். குறைந்தபட்சமாக களப்பணியாளர் பணிக்கு ரூ.19,900-ம், அதிகபட்சமாக நர்சிங் கண்காணிப்பாளர் பணிக்கு ரூ.44,900-ம் சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை: கணினி வ்ழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்ப்டுவார்கள். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மையம் விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து அறிந்து கொண்ட பின்னர் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ம், எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.400ம் செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு பொது பிரிவினருக்கு ரூ.400ம் , இதர பிரிவினருக்கு ரூ.400ம் திருப்பி அளிக்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 17.08.2024. விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.09.2024 ஆகும். மேலும் விவரங்களை https://indianrailways.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications