8ம் வகுப்பு தகுதி.. 50 ஆயிரம் வரை சம்பளம்.. சென்னையில் காத்திருக்கும் அரசு வேலை!
சென்னை: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் 8ம் வகுப்பு தகுதிக்கு 25 அலுவலக உதவியாளர் பணிகள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில். சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள 25 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 16ம் தேதி (இன்று) முதல், வருகிற 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாத சம்பளம் ரூ.15,700 - 50,000 (லெவல்-1) வழங்கப்படும். 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இப்பணிக்கான விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது இந்த அலுவலகத்தில் நேரிடையாகவோ வந்து சமர்ப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். வருகிற 31ம் தேதி மாலை 5.45 மணி வரை கடைசி நாள் என தெரிவித்துள்ளார்..
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications