சென்ட்ரல் வங்கியில் 3,000 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 3,000 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றாக சென்ட்ரல் வங்கி உள்ளது. பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் வங்கியின் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ளன. சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாக அவ்வப்போது நிரப்பப்படுகிறது. அதுபோக அவ்வப்போது பயிற்சி பணியிடங்களும் சென்ட்ரல் வங்கியில் நிரப்பப்படுகிறது.

பணியிடங்கள்: அந்த வகையில் தற்போது 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 31.03.2020 க்கு பிறகு பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 01.04.1996 - 31.03.2004க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வரையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்..10 ம் வகுப்பு தகுதி தான்.. நோ எக்ஸாம்! செம சான்ஸ் விட்றாதீங்க
சம்பளம் எவ்வளவு?: இந்த பணியிடங்கள் முற்றிலும் பயிற்சி (apprenticeship) அடிப்படையிலானது ஆகும். தேர்வு செய்யப்படும் விண்னப்பதாரர்கள் ஓராண்டுக்கு பணியில் அமர்த்தப்படுவார்கள். ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதர சலுகைகள் எதுவும் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ரூ.400 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 17 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு மற்றும் மொழித்திறன் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification-Engagement-of-Apprentices-2024-25.pdf என்ற இணையதளத்தை பார்வையிடவும்
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications